உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்
293 பேர் கைது; 115 பேர் விளக்கமறியலில்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
 ருவன் குணசேகர தெரிவிப்பு



உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல்  தொடர்பாக 293பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (05) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் ந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 293 பேரில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 178 பேர் தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தீவிரவாதிகளின் 06 பில்லியன் பெறுமதியான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 41 பேரின் 100 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top