களனி ரஜமகா விகாரையின்
தலைமை பதவியில் இருந்து ரணில் நீக்கம்
300 உறுப்பினர்களில் 7 பேர் மட்டுமே
கை உயர்த்தி ஆதரவு தெரிவிப்பு
களனி
ரஜமகா விகாரையின்
டயக்க சபாவின்
தலைவர் பதவியில்
இருந்து பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவை
நீக்குவதற்கு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
களனி
ரஜமகா விகாரையின்
டயக்க சபாவின்
உறுப்பினர்களால் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
டயக்க
சபாவின் நிகழ்ச்சி
நிரல் தொடர்பாக
கலந்துரையாடப்பட்ட போது, சபாவின்
தலைவராக பிரதமர்
ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக
செயற்படவில்லை என உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு
தெரிவித்தார்.
இதையடுத்து,
ரணில் விக்ரமசிங்கவுக்கு
ஆதரவு தெரிவிக்கும்
உறுப்பினர்களை கை உயர்த்துமாறு ரஜமகா விகாரையின்
விகாராதிபதி, கோரிய போது 7 பேர் மட்டுமே
கை உயர்த்தி
ஆதரவு தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தில்
300 உறுப்பினர்கள் வரை கலந்து
கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து,
இந்த தீர்மானத்தை
டயக்க சபாவின்
நிறைவேற்றுக் குழுவுக்கு அனுப்புவதென முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment