ஒரே நாளில் 500 புதிய பாடசாலை கட்டிடங்கள்
மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பதற்கு
கல்வி அமைச்சினால் நடவடிக்கை

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்ட நடவடிக்கையின் கீழ் ஒரே நாளில் 500 புதிய பாடசாலை கட்டிடங்களை மாணவர்களின் பாவனைக்காக கையளிப்பதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வசதிகள் நிறைந்த பாடசாலை அமைப்பை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், கிராமப்புற பாடசாலைகளை முழுமையான வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்வதற்காக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கபட்ட ´அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை´ வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள 9064 பாடசாலைகளில் 18000 ஆயிரம் திட்டங்களின் கீழ் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான மொத்த நிதி முதலீடு 65 ஆயிரம் மில்லியன் ரூபாய்களாகும்.

இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top