ஒரு நாள் முன்னரேனும்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்...?
76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
காத்திருக்கும் பேரிடி!
19ஆம்
திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தின்
ஆயுட் காலத்தை
5 வருடங்களாக குறைத்தமையினால் நாடாளுமன்றத்தில்
அங்கம் வகிக்கும்
76 உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்தாகும்
நிலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர்
நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்களைப் பூர்த்திச் செய்திருக்க
வேண்டும்.
முன்னர்
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் 6 வருடங்களாக இருந்தமையினால் இவர்களுக்கு
ஓய்வூதியம் பெருவதில் சிக்கல் இருக்கவில்லை.
எனினும்
19ஆவது திருத்தச்
சட்டத்தின் மூலம் ஆயுட் காலம் 5 வருடங்களாக
குறைக்கப்பட்டது.
இருப்பினும்
ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லையில் மாற்றம்
மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான
நிலையில் ஐந்து
வருடங்கள் பூர்த்தியடைவதற்கு
ஒரு நாளைக்கு
முன்னரேனும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்
76 உறுப்பினர்களுக்கு உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என
தெரியவந்துள்ளது.
ஜனாதிபதிக்கு
உள்ள அதிகாரங்களின்
பிரகாரம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்
1ஆம் திகதி
முதல் செப்டெம்பர்
மாதம் 1ஆம்
திகதிக்கு முன்னர்
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இந்நிலை உருவாகும்.
தற்போது
உள்ள நாடாளுமன்றம்
2015ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
அதன் ஐந்து
ஆண்டு ஆயுட்காலம்
2020ஆம் ஆண்டு
செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
5 வருடங்களை
பூர்த்தி செய்த
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்
கிடைப்பதுடன் 5 வருடத்திற்கு ஒரு நாளேனும் குறைவடைந்தால்
அது இரத்தாகிவிடும்.
0 comments:
Post a Comment