இறந்த தமிழ் தொழிலாளியின்
உடலை அடக்கம் செய்த விவகாரத்தில்
பிரதி அமைச்சர் பாலித விளக்கமறியலில்
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்துகமை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் அண்மையில், தமிழ் தோட்ட தொழிலாளியொருவரின் சடலத்தை புதைக்க தோட்ட உரிமையாளர் இடம்கொடுக்க மறுத்திருந்தார்.
சடலத்தை புதைக்க நீதிமன்றத்தின் மூலம் தோட்ட முகாமையாளர் தடையுத்தரவும் பெற்றிருந்தார். அதை மீறி சடலத்தை புதைத்த விவகாரத்திலேயே பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாலித தெவரபெருமவுடன் மேலும் 6 பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment