பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை
நமிரா சலீம் இஸ்ரோவுக்கு பாராட்டு
இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்ட சந்திரயான்-2 திட்டத்துக்காக பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே ஒரு பதற்றநிலை ஏற்பட்டு வார்த்தை போர் நடந்துவருகிறது. இந்த நிலையில், இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்ட சந்திரயான்-2 திட்டத்துக்காக பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் வரலாற்று முயற்சிக்காக இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். சந்திரயான்-2 திட்டம் உண்மையிலேயே மிகப்பெரிய துணிச்சலான செயல். இது தெற்கு ஆசியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே பெருமைக்குரியது.
தெற்கு ஆசியாவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி குறிப்பிடத்தகுந்தது. விண்வெளி ஆராய்ச்சியில் எந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பிரச்சினை அல்ல. அனைத்து அரசியல் எல்லைகளை மறந்துவிடுங்கள். பூமியில் எது நம்மை பிரிக்கிறது என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு - விண்வெளியில் எது நம்மை ஒன்றிணைக்கிறது என்று பாருங்கள். இவ்வாறு நமிரா சலீம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment