கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் வெற்றி
முக்கிய முடிவுகள் தொடர்பாக, பகிரங்கமாக
எதையும் பேசுவதில்லை என்றும் தீர்மானம்



ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                                                        
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக ரணவக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், மனோ கணேசன், பழனி திகாம்பரம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ரிஷாத் பதியுதீன், ஆகியோரை, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் காசிம், எரான் விக்ரமரத்ன ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக தகவல் வெளியிட்ட, மனோ கணேசன்,“சஜித் பிரேமதாச தரப்பினருடனான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகளுடன் முடிவடைந்ததுஎன்று தெரிவித்துள்ளார்.

ஐதேமு சார்பான அதிபர் வேட்பாளர் விவகாரத்தை அடுத்த வாரத்துக்கு மேல் இழுபறிப்பட ஒருபோதும் இடமளிப்பதில்லை என்பது உட்பட பல முக்கியமான முடிவுகள் இந்தச் சந்திப்பில் எட்டப்பட்டுள்ளன.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சஜித் பிரேமதாச தரப்பினர் நடத்தும் சந்திப்பு முடியும் வரை, நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனைய முக்கிய முடிவுகள் தொடர்பாக,பங்காளி கட்சிகள் சார்பில் பகிரங்கமாக எதையும் பேசுவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுஎன்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top