அரச
முகாமைத்துவ உதவியாளர்களின்
உத்தியோகபூர்வ பதவிப் பெயர்
“முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்”
என மாற்றம்
அரச
முகாமைத்துவ உதவியாளர் சேவை சேவையாளர்களின் உத்தியோகபூர்வ
பதவிப் பெயர் “முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்” என
பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேவைப் பிரமாணத்தின் பெயராக அமைந்துள்ள “அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பு” என்பதற்குப் பதிலாக “முகாமைத்துவ உத்தியோகத்தர்
சேவை பிரமாணக் குறிப்பு”என பதிலீடு செய்யப்படுகின்றது.
“அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை” எனக் குறிப்பிட்டுள்ள சகல பிரயோகங்களும் “முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை”என்றும் “அரச முகாமைத்துவ உதவியாளர்”
எனக்
குறிப்பிட்டுள்ள சகல பிரயோகங்களும் “முகாமைத்துவ
சேவை உத்தியோகத்தர்” என்று திருத்தியமைக்கப்படல் வேண்டும் என்பதோடு
அந்த சேவை பிரமாணக் குறிப்பில் “உத்தியோகத்தர்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது “முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்”எனவும் கருதப்படல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பான 2140/4 ஆம் இலக்க
வர்தமானி 2019.09.09 ஆம் திகயிடப்பட்டு
இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜே.கமகே அவர்களினால்
வெளியிடப்பட்டிருக்கிறது.
முகாமைத்துவ
உதவியாளர் சேவைகள் ஒன்றிணைந்த தொழிற்
சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பலனாகவே இந்த வெற்றி
கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment