சாய்ந்தமருது
அல் - ஜலால் வித்தியாலய
கட்டட
விவகாரம் :
கல்முனை
வலயக்கல்வி பணிமனை
முன்றலில்
இன்று போராட்டம் !!
சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திலுள்ள க/மு அல் - ஜலால் வித்தியாலய
கட்டட விவகாரம் தொடர்பாக அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களும் நலன்
விரும்பிகளும் இன்று வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு
கல்வியமைச்சின் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் க/மு அல் - ஜலால் வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 90 இலட்சம் ரூபா செலவில்
கட்டப்படவிருந்த கட்டட்த்தை இடைநிறுத்தி வேறுபாடசலைக்கு கொண்டு செல்ல அரச
அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறி மாகாண கல்விப் பணிப்பாளரின் கல்முனை வருகையை
அறிந்த பெற்றார்கள் இப் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடத்தை இப்பாடசாலையிலேயே
கட்ட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து இன்று (12) கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் முன்னால் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர் பின் வரும் வாசகங்கள்
அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி காரியாலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
** அரசே! எங்கள் அபிவிருத்தியை மீளப் பெற்றுத்தா.
** நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வித் திட்டத்தை
சீர்குலைக்காதே!
** அரசே மாணவர்களின் துயர் துடை.
** அதிகாரிகளே! மாணவர்களின் கல்வியைச்
சீரழிக்காதே.
** மாகாணக் கல்விப் பணிப்பாளரே! எங்கள் கல்வி
அபிவிருத்தியை தடை செய்யாதே.
** கல்வி அதிகாரிகளே! மாணவர்களுக்காகவே கல்வி அதன்
தாகத்தை தனியவிடு.
** கல்வி அமைச்சரே!அருகிலுள்ள பாடசாலை சிறந்த
பாடசாலை திட்டத்தை உயிரோட்டமாக்கு.
** கல்வி அதிகாரியே கல்வியில் ஊர் துவேசம் காட்டாதே
என்பன போன்ற வாசகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த
பதாதைகளில் காணப்பட்டன.
0 comments:
Post a Comment