சஹ்ரானின் மகளை,
மனைவியின் பெற்றோரிடம்
ஒப்படைக்க
நீதிமன்றம் உத்தரவு
உயிர்த்த
ஞாயிறு தாக்குதலின்
பிரதான சந்தேகநபராக
கருத்தப்படும் மொஹமட் சஹ்ரான் ஹசீமின் மகளை
அவரின் மனைவியின்
பெற்றோரிடம் ஒப்படைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
சஹ்ரானின்
மனைவி தற்போது
குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொறுப்பில்
உள்ளதால், அவரின்
மகளை சிறுவர்
சீர்த்திருத்த நிலையத்திற்கோ அல்லது உரிய பொறுப்பாளருக்கோ
ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
நீதிமன்றில் விடுத்திருந்த கோரிக்கையை ஆராய்ந்த கோட்டை
நீதவான் ரங்க
திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கட்டுபொத
பிரதேசத்தில் வசிக்கும் சஹ்ரானின் மனைவியின் பெற்றோரை
தவிர்த்து வேறு
எந்த தரப்பினருக்கும்
நீதிமன்ற அனுமதியின்றி
சிறுமியை ஒப்படைக்க
வேண்டாம் என
நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல்,.
நான்கு வயதுடைய
சிறுமி தொடர்பில்
உரிய கண்காணிப்பில்
இருக்குமாறு குளியாப்பிட்டி சிறுவர் சீர்த்திருத்த அதிகாரிகளுக்கும்
நீதவான் இதன்போது
உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment