சாய்ந்தமருதிலுள்ள அனைத்து பாடசாலைகளும்
மாணவர்கள் வருகைதராததால் இன்று இயங்கவில்லை
பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தை தடுத்து நிறுத்தி
வேறொரு பாடசாலைக்கு கொடுப்பதற்கு
எதிர்ப்பு தெரிவித்தே
மாணவர்களின் இந்த போராட்டம்


சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கென NSBS திட்டத்தில் கல்வி அமைச்சால் ஒரு கோடியே 90 இலட்சம் செலவில் வழங்கப்பட்ட கட்டிடம் திட்டமிட்டு கல்முனை வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர், பொறியியலாளர் ஆகியோரின் கூட்டுச் சதியால் வேறு பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு இடமாற்றப்பட்டதாகத் தெரிவித்தும் இவர்களி்ன் இச் செயல்பாட்டைக் கண்டித்தும் இன்று கல்முனைக் கல்வி கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச்செல்லாது வகுப்புக்களை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சுனாமியால் பாதிக்கப்பட்டதும் மீனவ சமூகத்தவர்களின் பிள்ளைகளுக்குமானதுமான சாய்ந்தமருது அல்  ஜலால் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தை தடுத்து நிறுத்தி, வேறொரு பாடசாலைக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் வகுப்புக்களை பகிஸ்கரித்து இந்த போராட்டத்தைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மானவர்களின் கல்வி நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் செய்துள்ள துரோகத்தை கண்டித்து சாய்ந்தமருதிலுள்ள ஏனைய பாடசாலைகளான அல்-ஹிலால் வித்தியாலயம், மல்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயம், அல் கமறூன் வித்தியாலயம், அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை(GMMS), றியாழுல் ஜின்னாஹ் வித்தியாலயம், கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மானவர்கள் இவ்வாறு வகுப்புக்களை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் பின் வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்க்ளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வித் திட்டத்தை சீர்குலைக்காதே!
அரசே மாணவர்களின் துயர் துடை.
பொறியியலாளரே! பொறுக்கி வேலை செய்யாதே!,
அதிகாரிகளே! மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே.
அரசே! எங்கள் அபிவிருத்தியை மீளப் பெற்றுத்தா.
மாகாணக் கல்விப் பணிப்பாளரே! எங்கள் கல்வி அபிவிருத்தியை தடை செய்யாதே.
கல்வி அதிகாரிகளே! மாணவர்களுக்காகவே கல்வி அதன் தாகத்தை தனியவிடு.
கல்வி அமைச்சரே!அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை உயிரோட்டமாக்கு.


Type-11 பாடசாலையான சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கட்டிடம் NSBSதிட்டத்தில் இல்லாத வேறு பிரதேசத்திலுள்ள1AB தர பாடசாலைக்கு எப்படி கல்வி அமைச்சின் அனுமதி இன்றி அதிகாரிகளால் மாற்றி வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது. 








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top