பெண்களுக்கான மிகச்சிறந்த
10 வேலைத்தளங்களில் பெஷன் பக்
பெஷன் பக், இலங்கையில் பெண்களுக்கு மிகப் பொருத்தமான முதல் 10 வேலைத் தளங்களில் ஒன்றாக 2019 ஆம் ஆண்டில் தெரிவாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவில் ஒத்துழைப்பு வழங்கி வரும் பெண்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அதற்கு மேலும் பெறுமதி சேர்க்கும் முகமாக இலங்கையில் முதல் முறையாக Great Place To Work நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பெஷன் பக் நிறுவனம் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் சமமான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, பால் ரீதியான மாற்றங்களை இல்லாதொழித்து, வேலைத்தளங்களில் பலதரப்பட்ட தன்மையை எப்போதும் கௌரவிக்கும் ஆடை விற்பனை நிறுவனமான பெஷன் பக், 30% பெண் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனமாகும்.
எப்போதும் பாதுகாப்பான வேலைச் சூழல் ஒன்றை, விசேடமாக பெண்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் பெஷன் பக் பெரும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் சகல மட்டங்களிலும் பெண்கள் சேவையாற்றி வருகின்றனர். நிறுவனத்தின் முகாமைத்துவம் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி தொழில்களைப் பிரித்துக் கொடுப்பதிலும், பதவி உயர்வுகள் மற்றும் பொறுப்புக்களை பகிர்ந்தளிப்பதிலும் எப்போதும் திறமைகளை மாத்திரமே கவனத்திற் கொள்கிறது.
நிறுவனத்தின் செயற்பாடுகளில் நிதி, கணக்கியல், பொருட்கள் கொள்வனவு, ஆக்கபூர்வமான தயாரிப்புக்கள் மற்றும் சில்லறை நடவடிக்கைகள் ஆகிய பிரிவுகளில் குறிப்பிடத்தக்களவு பெண்களின் பங்கேற்பைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலதிகமாக, விடுமுறைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலைகளைப் பாதிக்காத வகையில் இரு சாராருக்கும் சம அந்தஸ்து வழங்கி, விடுமுறைத் திட்டங்களையும் நிறுவனம் பெற்றுக் கொடுக்கிறது.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக பயிற்சி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றை நிறுவனம் கடைப்பிடிக்கிறது. இதற்காக விசேட விடுமுறைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
தமது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளில் பெண்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தியமையே, பெஷன் பக் நிறுவனத்திற்கு இந்த விருது கிடைத்தமைக்கு முக்கிய காரணமாகக் கருத முடியும்.
விசேடமாக, கீழ் மட்ட பெண் உத்தியோகத்தர்கள், தமது பிரச்சினைகளை பெண் உயர் அதிகாரிகளிடம் முறையிடுவதில் அல்லது தெரியப்படுத்துவதில் அதிக சௌகரிகத்தை உணர்வதனால், பெண் உயர் அதிகாரிகள் அடிக்கடி காட்சியறைகளையும், தொழில் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக செல்வது வழக்கமாகும்.
அப்போது ஏற்படுத்திக் கொள்ளப்படும் சிறந்த சிநேகபூர்வ உரையாடல்கள் மூலம் உயரதிகாரிகளின் அறிவு மற்றும் ஆற்றல்கள் கீழ் மட்ட உத்தியோகத்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதோடு, கீழ் மட்ட செயற்பாடுகளிலுள்ள உத்தியோகத்தர்களின் கவலைகள், பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் என்பன இங்கு ஆராயப்பட்டு, அவை உயர்மட்ட சிரேஷ்ட முகாமைத்துவக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகின்றன.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி. சபீர் சுபைன் இதுபற்றி விபரிக்கையில்,
‘பெஷன் பக் நிறுவனம், மிகச்சிறந்த வேலைத்தளங்களுக்கான விருதுகளை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் வென்றுள்ளது. பெண்கள் பணியாற்றும் வேலைத்தளங்களில் மிகச்சிறந்த 10 நிறுவனங்களில் பெஷன் பக் நிறுவனம் இடம்பிடித்துள்ளமை எமக்கு பெருமையைப் பெற்றுத் தருகிறது. பலதரப்பட்ட தன்மையும், அனைவருக்கும் சம அந்தஸ்து என்ற எண்ணக்கருவும் எமது மரபுகளில் காணப்படும் ஒரு விசேட அம்சமாகும். சில்லறை ஆடை வர்த்தக நிறுவனம் என்ற வகையில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஊழியர்கள் எமது முக்கிய உபாயகரங்கள் மற்றும் செயற்பாடுகள் வடிவமைப்பில் முன்னிலையில் பொறுப்புக்களை வகிக்கின்றனர். இவையனைத்துக்கும் மேலாக, இந்த முக்கியமான விருது மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், அதாவது, எமது 25ஆவது ஆண்டு நிறைவின் போது கிடைத்துள்ளது. இதன்மூலம் எமது நம்பிக்கை மற்றும் எமது செயற்பாடுகள் மூலம் நிறுவனம் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவருகிறது. அது தொடர்ந்தும் உச்சங்களை எட்டிச் செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
இலங்கையில் பெண்களுக்கு மிகச்சிறந்த வேலைத்தளங்களை தெரிவு செய்வது பற்றிய ஆய்வு இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் இடம்பெற்றது. இவற்றில் முதலாவது, நிறுவனத்தின் நம்பகத்தன்மை, அதாவது, நிறுவனத்தை அதன் ஊழியர்கள் எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது பற்றியதாகும். அத்துடன், அவர்கள் அங்கு வேலை செய்வதை ஒரு கௌரவமாகக் கருதுகிறார்களா, அதனை ஒரு குடும்பம் போல் அல்லது சகோதரர்கள் போன்று அந்த நிறுவனத்தின் அனைவரையும் கருதுகிறார்களா என்பது மற்றைய பகுதியாகும்.
அதன் இன்னுமொரு பகுதி கலாசார கணக்காய்வாகும். அதாவது, நிறுவனத்தின் முகாமைத்துவ எண்ணக்கருக்கள், செயற்பாடுகள் மற்றும் அவர்கள் பின்பற்றும் பொறிமுறைகள், இவற்றின் மூலம் ஊழியர்களின் அனுபவத்தை முன்னிலைப்படுத்துவதாகும். மிகச்சிறந்த 10 நிறுவனங்களைத் தெரிவு செய்வதில் 60% புள்ளிகள் பெண் ஊழியர்களின் அனுபவத்திற்கும், எஞ்சிய பகுதி நிறுவனத்தின் பெண் ஊழியர்களின் செயற்பாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டும் தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment