சாய்ந்தமருது
நகர சபைக்காக முஸ்லிம்
உம்மாவை
காட்டிக் கொடுக்கலாமா?
சாய்ந்தமருது
பிரகடனத்தின் 08 ம் பிரகடன
வாசகம் அப்பட்டமாக மீறப்பட்டமையமானது பள்ளிவாசல் நிருவாகம் மீது மக்கள்
கொண்டிருந்த நம்பிக்கைக்கு முரணானதாகும். சபைக்காக சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டு
விபச்சாரியிடம் சென்றாலும் சபை பெறும் முயற்சி நம்மை நாம் அழித்துக் கொள்வதற்கு
சமனாகும்.
சாய்ந்தமருது நகர சபையை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை
உலகம் பாராட்டும் அளவிற்கு ஒற்றுமையாக நின்று ஊரின் ஒற்றுமையை சாய்ந்தமருது
மக்களாகிய நாம் எடுத்துக் காட்டினோம்.நகரசபைக்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளை
ஓட, ஓட விரட்டினோம். 2017 ம் ஆண்டு "நவம்பர் வசந்தம் "எனும் சாய்ந்தமருது பிரகடனத்தை
வெளியிட்டோம்.அந்த பிரகடனத்தை உலகறியச் செய்தோம்.
சாய்ந்தமருது நகர
சபை பிரச்சினையை பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. எதுவித பிரதிபலனையும்
எதிர்பாராது எமக்காக குரல் எழுப்பியது.
பாராளுமன்ற ஹன்சாட்டில் நமது போராட்டம், கோரிக்கை,
வரலாற்று ஆவணமாக
பதியச்செய்தது.எமது கோரிக்கையை நாம் வாக்களித்து தெரிவு செய்த மக்கள் பிரதிநிதி மக்கள் வழங்கிய ஆணைக்கே விரோதமாகச் செயற்பட்டு அதனை
அரசு வழங்க விடாது செயற்பட்டு வருவதையும் நமது மக்கள் அறியாமல் இல்லை.
ஆட்சி மாற்றத்தின் போது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவைற்றப்பட்டுவிடும் அடுத்த தேர்தலில் தான் நிச்சயம் தோற்கடிக்கப்பட்டுவிடுவேன் என்ற அச்சம் காரணமாக மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி விட்டு ஜனாதிபதி
தேர்தலில் மதில் மேல் பூனையாக அவர் இருந்து வருவது சகலருக்கும் தெரிந்த விடயம்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவுக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இலங்கை முஸ்லிம்களில் 100க்கு 95 வீத மானவர்கள் எதிர்ப்புணர்வை
வெளியிட்ட வண்ணமுள்ளனர். அவர்களது அணியில் நாட்டில் பிரசித்தி பெற்ற இனவாத கும்பல்கள்
ஒன்று சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் முஸ்லிம்
வாக்குகள் எமக்கு தேவையில்லை என்று பகிரங்கமாக கூறி திரிகின்றனர்.
இந்த நிலையில் சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல். ஜனாதிபதி தேர்தலில் கோடாவுக்கு ஆதரவளிக்குமாறு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி
அதனை மக்களுக்கு அறிவித்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருதில் மையோன் முஸ்தபாவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மொட்டு கூட்டத்தில் மகிந்த வந்தபோது அங்கு பள்ளிவாசல் செயலாளர் மேடையேறி தன்னை பள்ளிவாயில் செயலாளரென
அறிமுகப்படுத்தி மகிந்தவுக்கு ஆதரவளிக்கும் பள்ளி தீர்மானம் என ஒன்றை அறிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பள்ளிவாசல் செயலாளர் என்பவர் பள்ளிவாசல் நிருவாகத்திற்கு உரியவரேயன்றி ஊரின்
தலைவிதியை ஊர் மக்களின் ஜனநாயக உரிமையை விற்கும் ஒருவர் அல்ல என்பதை அவர் உணர்ந்து
கோள்ளவேண்டும். பள்ளிவாசல் செயலாளர் ஆக தற்போது கடமையாற்றுபவர் இனவாத கும்பலின் தலைவனான விமல் வீரவங்சவின் இணைப்பாளராகளில் ஒருவராகக் கடமையாற்றியவர்.
இப்போதும் பள்ளிவாசல் செயலாளருக்கும் வீரவங்சவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.பள்ளிவாசல் என்ற திரைக்குள் மறைந்து கொண்டு விமல் வீரவங்சவின் பிரதிநிதியாக மேடையேறினாரா
எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சாய்ந்தமருது மக்கள் போராட்டம் நடாத்தி நாட்டின் கவனத்தை திசை திருப்பிய சமயம் எதிர்க்கட்சி
வரிசையில் இருந்த மகிந்தவோ அல்லது மகிந்தவின் சகாக்களோ எமது போராட்டத்திற்காக வாய் திறக்கவில்லை. எம்மை வந்து சந்திக்கவில்லை.இந்த நிலையில் தான் JVP எமக்காக கதைத்து
பாராளுமன்ற கவனத்தை ஈர்த்தது. அதன் மேடையில் ஏறி என்று நன்றி கடனை தீர்த்தாலும் ஏற்றுக்கொள்ள முடியும்.
முஸ்லிம்களின் ஒற்றுமையை உலகுக்கு இனவாதத்திற்கெதிராக காட்ட வேண்டும் என இலங்கை முஸ்லிம்கள்
ஒற்றுமைப்பட்டு செயற்படுகையில் முஸ்லிம்களை ஒரு உள்ளூராட்சி சபைக்காக
காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டில் சாய்ந்தமருது பள்ளிவாசல்
நிருவாகம் செயற்படுவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சாய்ந்தமருது மக்களின் ஜனநாயக வாக்குரிமையை பள்ளிவாசல்
நிருவாகம் எவருக்கும் அடகு வைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது. அதற்கான
தார்மீக உரிமையும் அவர்களுக்கு இல்லை.
சாய்ந்தமருது பிரகடனத்தின் 08 ம் பிரகடன வாசகம் அப்பட்டமாக மீறப்பட்ட மையமானது பள்ளிவாசல்
நிருவாகம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு முரணான தாகும். சபைக்காக
சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டு விபச்சாரியிடம் சென்றாலும் சபை பெறும் முயற்சி நம்மை நாம் அழித்துக் கொள்வதற்கு சமனாகும்.
குடத்துடன் கோபித்துக் கொண்டு குண்டி கழுவாத நிலைக்கு நாம் செல்லமுடியாது. நமது சபைக்கு தடையாக
இருப்பவனுக்கு பாடம் படிப்பிக்கும் காலம் மிக விரைவில் வரும். அது வரை பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.
-
ஏ.எல்.எம்.முக்தார்
0 comments:
Post a Comment