அரச, தனியார்
துறை ஊழியர்களின்
Payee Tax நீக்கப்படும்
நாம்
யாராக இருந்தாலும் பரவாயில்லை.
எந்த
மொழியில் பேசினாலும் பிரச்சினை கிடையாது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய
ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (25) காலை கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் உள்ள
மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
´உறுதியான நோக்கம் - தொழில் செய்யும் நாடு´ என்ற தொனிப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம்
வெளியிடப்பட்டுள்ளது.
பல தொழில் வல்லுனர்கள் மற்றும் சமூக குழுக்களின் ஆலோசனைகளை
பெற்று இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ,
இலங்கை அனைவருக்குமான ஒரு
நாடு. அதை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டேன். அந்நிய தேசத்தினரின் தலையீடுகளுக்கும்
இடமளிக்கமாட்டோம்.
நாட்டின் தேசிய பாதுகாப்பே ஒரு அரசின் பிரதான கடமையாக நாம்
பார்க்கிறோம். எமது தாய் நாட்டை பயங்கரவாதம், போதை பொருள், கொள்ளை, கப்பம் மற்றும் அந்நிய தேச தலையீடு
என்பவவற்றில் இருந்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்போம்.
இந்த நாட்டுக்கு பாதுகாப்பு வழங்கும் மற்றும் வழங்கிய
முப்படையினரை நாம் பாதுகாப்போம். நாம் அனைவரும் ஜனநாயகத்தை மதிக்கிறோம். அதனால்
சர்வஜன வாக்குரிமையை மதித்து, மக்கள் தீர்ப்பை மதித்து நாம் நாட்டினுள் செயற்படுவோம்.
ஒரு நாட்டில் ஒரு நீதியே இருக்க வேண்டும். அது அனைவருக்கும்
சமமாக அமுலாக வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விரைவில்
தீர்க நடவடிக்கைகளை எடுப்போம்.
இவை அனைத்தும் எனது இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளவை.
அவை என் ஆட்சி காலம் முழுவதுமாக இருக்கும்.
அவை எவ்வாறாயினும் நாட்டு மக்களுக்கு தற்போது தேவை
என்னவென்றால் வாழக்கை செலவை குறைப்பதே ஆகும். நான் உடனடியாக மக்களின்
வாழ்வாதாரத்தில் இருக்கும் சிக்கல்களை நிறைவு செய்வேன்.
உற்பத்திகளை அதிகரித்து மக்கள் மீது சுமத்தப்பட்டுளள வரியை
குறைத்து மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளேன்.
உயர்தரத்தில் சித்தி அடையும் அனைத்து இளைஞர், யுவதிகள் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான
புதிய திட்டங்களை அறிமுப்படுத்துவோம். வட் வரி 8 சத வீதமாக குறைக்கப்படவுள்ளது. நடைமுறையில்
உள்ள மேலும் சில வரிகள் ரத்து செய்யப்படும்.
அரச, தனியார் துறைகளில் கடமையாற்றும் ஊழியர்களின் Payee Tax முற்றாக நீக்கப்படும்.
எனது தலைமைத்துவ அரசாங்கத்தில் ஊழலுக்கு இடமில்லை.
எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்த பொறுப்பை நான் செய்து முடித்தேன். நாம் யாராக
இருந்தாலும் பரவாயில்லை. எந்த மொழியில் பேசினாலும் பிரச்சினை கிடையாது.
இறுதியில் நாம் இலங்கையர்கள் என்று புரிந்து கொண்டால் சரி.
அதுவே எனது இலட்சியம், குறிக்கோள். நான்
நாட்டை கட்டியெழுப்புவேன் என்று உறுதி வழங்குகிறேன் எனவும் கோத்தாபய ராஜபக்ஸ
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment