ஏற்றுக்கொள்ள முடியாத முடிவு!
சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசலும்
தோடம்பழமும் முஸ்லிம் காங்கிரஸை எதிர்த்து அரசியல்
செய்வதை ஓரளவு
ஏற்றுக்கொண்டாலும் மொட்டை ஆதரிக்க
முன்வந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இத்
தேர்தலில் சிறுபான்மையினரை
அரவனைக்கக் கூடிய இரு வேட்பாளர்களே களத்தில்
உள்ளனர். ஒருவர்
சஜித் மற்றவர்
அநுர. இதில்
சஜித்தை முஸ்லிம்
காங்கிரஸ் ஆதரிக்கிறது
என்றால் சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசலும்
தோடம்பழமும் அநுரவிற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும்.
இதனை
விடுத்து, இவர்கள்
இனவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இவர்களின் வக்கிர
புத்தியை எடுத்துக்
காட்டியிருக்கின்றது. இது இவர்களின்
போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நகர்வு
என்பதில் சந்தேகமில்லை.
எமது
ஊருக்கு சபை
கிடைத்தால் போதும் நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கு என்ன
நடந்தாலும் பரவாயில்லை என்று ஒரு பள்ளிவாசல்
முடிவு எடுத்திருப்பது
கவலையளிக்கிறது.
Razmy Nazeer
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.