கோத்தாவின் தேர்தல் அறிக்கை
வெளியீட்டு நிகழ்வில் சீனத் தூதுவர்
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டுள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் நேற்றுக் காலை நடந்த நிகழ்வில், கோத்தாபய ராஜபக்ஸவின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பொதுஜன பெரமுன மன்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், கோத்தாபய ராஜபக்ஸவை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்கள், துறைசார் வல்லுனர்கள், பங்கேற்றிருந்தனர்.
சீன தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீன இராஜதந்திரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீன தூதுவருக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரமுகர்கள் வரிசையில் முதல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தது.
சில ஐரோப்பிய நாடுகளின் இராஜதந்திரிகள் சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, இந்த நிகழ்வு மேடையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், மருத்துவ கலாநிதி அனுருத்த பாதெனியவும் கலந்து கொண்டார்.
அரசாங்க பணியாளர்கள் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தேர்தல் சட்டங்களுக்கு முரணானது என்ற போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்றமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment