ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த
2 வயது குழந்தை சுர்ஜித் உயிரிழப்பு
- வருவாய் நிர்வாக ஆணையர் அறிவிப்பு
சோகத்தில் மக்கள்!
திருச்சி
நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள்
விழுந்த 2 வயது
குழந்தை சுர்ஜித்
உடலில் இருந்து
துர்நாற்றம் வீசுவதாகவும் குழந்தை உயரிழந்து விட்டதாக
நிர்வாக ஆணையர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி
மாவட்டம் மணப்பாறை
அருகே நடுக்காட்டுப்பட்டியில்
உள்ள வீட்டின்
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது
குழந்தை சுர்ஜித்
ஆழ்துளை கிணற்றுக்குள்
தவறி விழுந்தான்.
குழந்தையை மீட்க
பல்வேறு மீட்புக்குழுவினர்
தொடர்ந்து முயற்சி
செய்தும் பலன்
அளிக்கவில்லை.
சுர்ஜித்தை
ரிக் இயந்திரத்தின்
மூலம் மீட்கும்
முயற்சி ஒருபுறம்
நடைபெற்று கொண்டிருக்கும்
போது சிறுவன்
விழுந்த ஆழ்துளை
கிணறு சுற்றி
உள்ள இடங்கள்
அனைத்தும் காவல்துறையினர்கள்
கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
மேலும்
ஆழ்துளை கிணறு
அருகே அமைச்சர்கள்,
அரசு அதிகாரிகள்,
மாவட்ட ஆட்சியர்
மற்றும் மருத்துவ
குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை
நடத்தி வருவது
அந்த இடத்தில்
சற்று பரபரப்பை
ஏற்படுத்தியது. இந்நிலையில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
நிர்வாக ஆணையர்
ராதாகிருஷ்ணன் குழிக்குள் இருந்து இரவு 10.30 மணியளவில்
இருந்து சிறுவன்
உடல் அழுகிய
நிலையில் துர்நாற்றம்
வீசுவதாக தெரிவித்துள்ளார். இதனால்
குழந்தை சுர்ஜித்
உயிரிழந்து விட்டதாகவும், குழந்தையின் உடல் மீட்பது
குறித்து மீட்புபடையினரின்
தகவல் குறித்து
அடுத்து அறிவிக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை
கிணற்றில் விழுந்த
குழந்தை சுஜித்
மீண்டு வர
வேண்டும் என
பல்வேறு இடங்களில்
கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும்
வழிபாடு நடத்தி
வந்த நிலையில்
வேண்டுதல் அனைத்தும்
பலன் அளிக்கவில்லை.
0 comments:
Post a Comment