100
அடியை 5 மணிநேரத்தில்
தோண்ட
திட்டமிட்டோம்..
ஆனால்..’- மீட்பு
பணி குறித்து
ரிக்
இயந்திர ஊழியர்கள்
10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டது. ரிக் இயந்திரத்தால்
பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 4 மணிநேரங்களுக்கு மேலாகியும் 28 அடி
கூட தோண்டி முடியவில்லை.
சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 40
மணிநேரங்களை கடந்துவிட்டது. அதிநவீன ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணற்று அருகே 3 மீற்றர்
இடைவெளியில் மற்றொரு துளை தோண்டப்பட்டு வருகிறது. ஒரு மீற்றர் அகலகத்தில் ஒரு நபர்
உள்ளே செல்லும் அளவில் அந்தக் குழி தோண்டப்படுகிறது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளே
சென்று குழந்தையை மீட்பதுதான் திட்டம்.
அதன்படி ரிக் இயந்திரம் மூலம் தோண்டும் பணி இன்று காலை 6.30
மணியளவில் தொடங்கியது. முதல் 15 நிமிடத்தில் 3 அடி ஆழம் அளவுக்கு தோண்டப்பட்டது.
அடுத்தடுத்து 10 அடி வரை விரைவாக தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின் தோண்டுவதில்
சிக்கல் எழுந்தது. 10 அடிக்கு கீழே பாறைகள் வந்துவிட்டது. ரிக் இயந்திரத்தால்
பாறைகளை எளிதாக தோண்ட முடியவில்லை. இதனால் 4 மணிநேரங்களுக்கு மேலாகியும் 28 அடி
கூட தோண்டி முடியவில்லை.
இதுதொடரபாக ரிக் வண்டி ஊழியர்களிடம் பேசியபோது, ``ஒரு முறை ரிக் இயந்திரம் மண்ணுக்குள் செலுத்தினால் ஒரு அடியாவது தோண்டிவிடும்.
மணல் என்றால் வேலை ஈசியாக முடிந்துவிடும். ஆனால் இங்கு பாறைகளாக இருப்பதால்
பாறைகளை குடைந்து மணலாக்குவதற்கு மேலும் தாமதம் ஆகிறது. முதலில் 30 அடிக்கு கீழ்
தான் பாறைகள் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதனால் 100 அடியை 5 மணிநேரத்துக்குள்
தோண்ட திட்டமிட்டோம். ஆனால் 10 அடிக்கு கீழேயே பாறைவந்துவிட்டது. இதனால் மேலும்
காலதாமதம் ஆகிறது" என்றனர்.
`100 அடியை 5 மணிநேரத்தில்
தோண்ட திட்டமிட்டோம்.. ஆனால்..’- மீட்பு பணி குறித்து ரிக் இயந்திர ஊழியர்கள்
தற்போது தோண்டப்பட்டு வரும் ரிக் வாகனம் 150 நியூட்டான்
திறன் கொண்டது. இந்த வாகனம் கிராமத்துக்குள் வருவதற்கே பல்வேறு சிரமங்களை
சந்தித்தது. இந்த ரிக் வாகனத்தின் மூலமாக சுரங்க பணிகள், மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை வைத்து பாறைகளை தோண்டுவதில் சிரமம்
ஏற்பட்டுள்ளதை அடுத்து 320 நியூட்டான் திறன் கொண்ட ரிக் வாகனம் தற்போது
சிவகங்கையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணித் துளிகளில் இந்த
வாகனம் வந்துவிடும் என்றும் அதன்மூலம் பாறைகளை எளிதில் குடைந்துவிடலாம் என
நம்ப்படுகிறது.
0 comments:
Post a Comment