உயிர்த்த ஞாயிறு தாக்குதலை
தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை
-வெளிவந்தது தெரிவுக்குழு அறிக்கை
( அறிக்கை தமிழில் இணைப்பு)
உயிர்த்தஞாயிறு தினத்தன்று தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே தாக்குதல்
தொடர்பில் சான்றுகள் கிடைத்திருந்த போதிலும், அது குறித்து நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக நாடாளுமன்ற
தெரிவுக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி
நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட
நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி, பிரதமர் உட்பட
பல்வேறு தரப்பினரிடமும் சாட்சியப்பதிவுகளை மேற்கொண்டிருந்தது.
இந்தநிலையில் தெரிவுக்குழுவின் அறிக்கை நேற்றையதினம் வெளியிடப்பட்டநிலையிலேயே
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், 277 பேர் உயிரிழந்துள்ளதுடன் (8 தற்கொலைதாரிகள்
அடங்கலாக) 400ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
40 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை, சம்பவத்தில் 45
சிறார்கள் உயிரிழந்துள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment