குகையில் துரத்திய மோப்ப நாய்;
கண்ணீர்விட்டு கதறல்; சிதறிய குண்டுகள்!
- பக்தாதியின் கடைசி நிமிடங்கள்
70 கோடி
சன்மானம், 3 ஆண்டுகளுக்கு மேலான தேடல் இருந்தும்
எவரிடமும் சிக்காத
பக்தாதி அமெரிக்க
படையிடம் சிக்கியது
எப்படி என்பது
குறித்த தகவல்கள்
தற்போது வெளியாகியுள்ளன.
பிணைக்
கைதிகளை கழுத்தறுத்துக்
கொல்லுதல், சிரியாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு மன்னிப்பில்லாத
மரண தண்டனை,
பெண்களுக்கு பாலியல் சித்ரவதை மற்றும் அதை
வீடியோவாக சமூக
வலைதளங்களில் பரவவிடுவது என உலக நாடுகளை
அச்சுறுத்திக்கொண்டிருந்தவர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்
அபுபக்கர் அல்
பக்தாதி.
இஸ்லாமிக்
ஸ்டேட் ஆஃப்
ஈராக் என்ற
ஐஎஸ்ஐ தீவிரவாத
இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல்
தலைவராக இருந்தவர்
பக்தாதி. பின்பு,
2013-ம் ஆண்டு
அல்கொய்தா தீவிரவாத
அமைப்பை இணைத்துக்கொண்டார்.
பின்பு, தன்னுடைய
இயக்கத்தின் பெயரை ஐ.எஸ்.ஐ.எஸ் என மாற்றிக்கொண்டார். பல்வேறு முக்கிய தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த பக்தாதி கடந்த
5 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார்.
இவர்
கடந்த 27-ம்
திகதி அமெரிக்க
படையினால் கொல்லப்பட்டதாக
தகவல் வெளியானது.
பின்பு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அந்தத் தகவலை
உறுதி செய்து,
``பக்தாதி கொல்லப்பட்ட
இரவு அமெரிக்காவுக்கு
மட்டுமல்ல, உலகுக்கே சிறப்பான ஓர் இரவு.
உலகில் ஆயிரக்கணக்கான
மக்களைக் கொன்று
குவித்த கொடூரமான
கொலைகாரர் அழித்தொழிக்கப்பட்டார்.
இனி எந்த
அப்பாவி மக்களுக்கும்
அவரால் துன்பம்
வராது. ஒரு
நாயைப் போன்று,
கோழையைப் போன்று
அல் பக்தாதி
உயிரிழந்தார்" என அதிகாரபூர்வமாக
அறிவித்தார்.
எப்போதும்
ஒரே இடத்தில்
தங்குவது பக்தாதி
வழக்கம் கிடையாது.
இதனால் அவரைக்
கண்டுபிடிப்பதில் தாமதம் காட்டிவந்த அமெரிக்கா இந்தமுறை
அவர் தங்கும்
இடத்தை அறிந்தது
குர்தீஷ் படைகளின்
உதவியுடன்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பே குர்தீஷ்
படைகளிடம் இருந்து
பக்தாதி தங்கியிருக்கும்
இடம்குறித்து தகவல் பறந்துள்ளது. அதை உறுதிப்படுத்திக்கொண்ட
அமெரிக்க ராணுவம்
ஞாயிறு நள்ளிரவு
கே-9 டாக்ஸ்
பிரிவு வீரர்களுடன்
8 ஹெலிகாப்டர்கள் வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில்
உள்ள பரிஷா
என்ற கிராமத்துக்கு
விரைந்தனர்.
துருக்கியை
ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் சிரிய அரசுக்கு
ஆதரவாக ரஷ்யாவும்
இரானும் உள்நாட்டுப்
போரில் சண்டையிட்டு
வருகின்றன. ரஷ்யா - ஈரான் வீரர்களின் கட்டுப்பாட்டில்
உள்ள ஆபத்தான
பகுதியாக வரையறுக்கப்பட்ட
இந்த இடத்தை
தாண்டித்தான் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறக்க வேண்டும்
என்ற நிலையில்
சுமார் 1 மணி
நேரம் 10 நிமிட
பயணத்தில் பக்தாதி
பதுங்கியிருந்த கட்டடத்தைச் சுற்றி வளைத்தன கே-9
டாக்ஸ் பிரிவு.
முதலில் பக்தாதி
பதுங்கியிருந்த கட்டடத்தின்மீது வான்வழியாக
சில நிமிடங்கள்
குண்டு மழைப்
பொழியப்பட்டுள்ளது. இந்த வான்வழித்
தாக்குதலில் பல்வேறு தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
பின்னர்
அதிரடியாக மோப்ப
நாய் சகிதமாக
ஹாயத் தஹ்ரீர அல்
ஷாம் தீவிரவாதிகளின்
ஆதரவுடன் பக்தாதி
மறைந்திருந்த வீட்டுக்குள்ளே நுழைந்தனர் கே-9 டாக்ஸ்
வீரர்கள். அங்கிருந்த
தீவிரவாதிகளை சில நிமிட சண்டையில் சுட்டுவீழ்த்திய
கே-9 டாக்ஸ்
பிரிவு வீரர்கள்,
வீட்டின் முன்புற
வாசலில் வெடிகுண்டுகள்
இருக்கலாம் என்பதால் அதைத் தவிர்த்து வேறு
வழியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதன்படி,
கட்டடத்தின் பின்பக்க சுவரை குண்டுவீசித் தகர்த்து
தொடர்ந்து முன்னேறியது
கே-9 டாக்ஸ்
படை. அங்கு
சில தீவிரவாதிகள்
சரணடையவே, 11 குழந்தைகள் வரை மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப்
பெரிதும் உதவியது
ரோபோவும் ஒரு
நாயும்தான் எனக் கூறப்படுகிறது. `பக்தாதி மறைந்திருந்த
வீட்டில் பாதுகாப்புக்காக
வீட்டைச் சுற்றிலும்
வெடிகுண்டுகளை மறைத்துவைத்திருக்கலாம் என்பதால்
முதலில் ரோபோவை
அனுப்பி செக்
செய்த பிறகே
அமெரிக்க வீரர்கள்
உள்ளே நுழைந்தனர்'
என அமெரிக்க
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பக்கா
பிளானுடன், நவீன ஆயுதங்கள், தகுந்த முன்னெச்சரிக்கை
நடவடிக்கையுடன் தொடர்ந்து முன்னேறிய கே-9 டாக்ஸ்
படை, பக்தாதி
தங்கியிருந்த இடத்தை அடைந்துள்ளனர். முதலில் பக்தாதியை
சரணடையுமாறு அமெரிக்க படை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு செவிமடுத்து
உயிரைக் காத்துக்கொள்ள
வீட்டுக்குள்ளே இருந்த ஒருவழிப்பாதை குகைக்குள் தனது
மகன்களுடன் ஓடிப் பதுங்கியுள்ளார் பக்தாதி.
அவர்
பதுங்கியிருந்த இடத்தை கே-9 டாக்ஸ் படையின்
மோப்ப நாய்
கண்டறிந்து துரத்தவே, தான் அணிந்திருந்த தற்கொலை
உடையை வெடிக்கச்
செய்து உயிரிழந்துள்ளார்.
இதில் ஒட்டுமொத்தக்
கட்டடமும் சுக்குநூறாக
நொறுங்கியுள்ளது. உயிரிழக்கும்முன் நோய்வாய்ப்பட்டு
பலவீனமான நிலையில்
இருந்த பக்தாதி,
அமெரிக்க படைகளுக்கு
முன், உயிரை
காத்துக்கொள்ள கண்ணீர்விட்டு அழத் தொடங்கியதாகவும் அமெரிக்க
ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏராளமான
தீவிரவாதிகள், பக்தாதியின் இரண்டு மனைவிகள் எனப்
பிழைத்தவர்களைவிட இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
அதிகம் என்றாலும்,
இந்தத் தாக்குதலில்
அமெரிக்க வீரர்கள்
யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பக்தாதியை
கண்டுபிடித்து அமெரிக்காவின் ஹீரோவாக வலம்வரும் கே-9
டாக்ஸ் படையின்
மோப்ப நாய்க்கு
மட்டும் தாக்குதலில்
சிறிது காயம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தாதி
உயிரிழந்ததை உறுதிப்படுத்திக்கொள்ள உடனடியாக
நவீன இயந்திரங்கள்
வரவழைக்கப்பட்டு டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டடத்தில் சிதறி இருந்த உடல்பாகங்களைக்
கொண்டு நடந்த
டிஎன்ஏ சோதனையில்
பக்தாதி உடலுடன்
ஒத்துப்போனதை அடுத்து இறப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தது
அமெரிக்கா. தாக்குதலுக்கும் டிஎன்ஏ சோதனைக்கும் அமெரிக்க
படைகளுடன் முக்கிய
பங்குவகித்தது குர்தீஷ் படைகள்தான்.
பக்தாதி
இருந்த இடத்தை
அமெரிக்காவுக்கு தெரிவித்ததும் அவரின் உள்ளாடையைக் கைப்பற்றி
டிஎன்ஏ சோதனைக்கு
உதவியதும் அவர்கள்தான்.
இதற்காக ட்ரம்ப்,
குர்தீஷ் படைகளுக்கு
மிகப்பெரிய நன்றியை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டுவார
கண்காணிப்புக்கு மத்தியில் களமிறங்கிய அமெரிக்கப் படை
இரண்டு மணிநேர
தாக்குதலில் பக்தாதிக்கு முடிவுரை எழுதியது. ஒசாமா
பின்லேடனுக்கு முடிவுரை எழுதியபோது அமெரிக்க ராணுவம்
அவரின் உடலை
கடலில் வீசியது
எனக் கூறப்பட்டது.
`தற்போதும் அதே பாணியைப் பின்பற்றி பக்தாதியின்
உடலும் கடலில்
வீசப்பட்டது' என அமெரிக்க தேசிய பாதுகாப்பு
ஆலோசகர் ராபர்ட்
ஓ பிரையன்
தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறிவருகின்றன.
பக்தாதிக்கு
நாள் குறிக்கப்பட்ட
விவகாரம் பென்டகன்
மூலமாக ட்ரம்ப்புக்குத்
தெரிவிக்கப்பட்டது என்றும், அதன்படி
கே-9 டாக்ஸ்
படையினர் நடத்திய
மொத்த தாக்குதல்களையும்
அதிகாரிகள் சகிதமாக வெள்ளை மாளிகையில் இருந்து
ட்ரம்ப் நேரலையில்
கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால்,
இதுகுறித்து வாய் திறக்காத ட்ரம்ப், ``அல்
பக்தாதி, குகைக்குள்
உயிரைக் காத்துக்கொள்ளத்
தப்பி ஓடி,
அச்சத்தால் கூனிக் குறுகி படை வீரர்களைப்
பார்த்து அஞ்சி
அழுததும் வித்தியாசமாக
இருந்தது. அதற்கான
வீடியோ ஆதாரங்களும்
கிடைத்துள்ளன" எனப் பேசியுள்ளார்.
ஒட்டுமொத்த
அமெரிக்க தேசத்திலும்
பக்தாதி கொல்லப்பட்டது
குறித்த பேச்சுகளாகத்தான்
உள்ளது. ஒபாமாவுக்குப்
பின்லேடன் என்றால்,
ட்ரம்ப்புக்கு பக்தாதி என அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து
இப்போதே அரசியல்
பேசத் தொடங்கிவிட்டனர்
அமெரிக்கர்கள்.
0 comments:
Post a Comment