ஐந்து
பாடசாலைகள்
தேசிய
பாடசாலையாக தரமுயர்வு
பொலன்னறுவை மாவட்டத்தில் தோப்பாவெல மகா வித்தியாலயம்,
கதுருவெல முஸ்லிம் மத்திய
கல்லூரி, விலயாய மகா
வித்தியாலயம், திவுலன்கடவல மகா
வித்தியாலயம் மற்றும் பகமூன மஹசென் மகா வித்தியாலயம் உள்ளிட்ட ஐந்து பாடசாலைகளை
தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வு வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவின்
தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில்
நடைமுறைப்படுத்தப்படும் “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகளுக்குத்
தேவையான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டிடம், விளையாட்டு மைதானம், கேட்போர்கூடம், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் உட்பட சுமார் 18 கோடி ரூபா செலவில் இப்பாடசாலைகளில்
மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மாணவர்களிடம் ஆளுநரினால்
கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment