இந்திய இராணுவத்தினரால்
படுகொலைசெய்யப்பட்டவர்களின்
32 ஆவது ஆண்டு நினைவு தினம்
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய
தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 அப்பாவிகளின் 32 ஆவது
ஆண்டு நினைவு தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி
நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட வைத்தியசாலைப் பணியாளர்கள்
அஞ்சலி செலுத்தினர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம்
திகதி புகுந்த இந்தியப் படையினர், 68 அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்தனர்.
2 நாள்களாக வைத்தியசாலை ஆக்கிரமித்து வைத்திருந்த இந்தியப் படைகள்,
3 மருத்துவர்கள், 2 தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்களையும்,
சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களையுமாக 68 பேரைக் கொன்று குவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment