குழந்தை சுர்ஜித்தை மீட்க
நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்
இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம்
 - அமைச்சர் விஜயபாஸ்கர்




                                                                                  
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில், குழந்தை இருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ' மீட்பு பணிகள் நடைபெறும் பகுதி முழுவதும் கடினமான பாறைகள் சூழ்ந்திருப்பதால் மீட்புப்பணிகள் மிகவும் சவாலாக உள்ளது. ரிக் இயந்திரம் மூலம் இந்நேரம் 90 அடிகள் தோண்டியிருக்க வேண்டும் ஆனால் பாறைகள் மிகமிக கடினமாக இருப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.

எனவே, மாற்றுத்திட்டம் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறோம். இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்என்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top