சாய்ந்தமருது இன்று எடுத்திருக்கின்ற
பிழையான முடிவு


சாய்ந்தமருது இன்று எடுத்திருக்கின்ற பிழையான முடிவுக்கு முஸ்லீம் காங்கிரஸ் தான் முழு முதற் காரணம். இது சம்பந்தமாக விலாவாரியாக பேசியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், என்றைக்கு இருந்தாலும் கொடுக்கப்பட வேண்டியதுதானே என்று அந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற விட்டு இலகுவான அரசியல் செய்யாமல் அடாவடித்தன அரசியல் செய்து ஒரு சமூகத்தையே சீரழிக்கும் முடிவுக்கு அவர்கள் வரக் காரணமாகி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் சோதனை நடத்தி, சந்தேகப் படுபவர்களை நடுத்தெருவில் பிணமாகக் காண ஆசைப்படும் சில அறிவுகெட்ட ஜந்துக்களின் பின்னால் ஒப்பந்தம் என்ற பெயரில் வெற்றுக் காகிதங்களில் கிறுக்கிக் கொண்டு அதனை வேத வாக்காக காட்ட முயற்சிக்கும் எமது பள்ளி நிர்வாகமும் இதனை செய்யத் தூண்டிய சில சில்லறைகளும் நாளை இந்த மக்களின் துயரில் பங்கேற்கப் போவதில்லை.
தலைவரே இன்னும் காலம் சென்று விடவில்லை. தயவு செய்து உங்களது சண்டியரை இரங்கி/ இறங்கி வரச்சொல்லுங்கள்.

Sihabdeen Najimudeen


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top