சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்று
 சீரழிக்க மொட்டு கட்சியினர் முயற்சி?
முஸ்லிம் சமூகத்தினரை நசுக்குவதற்காகவும்
சிறுபான்மை கட்சிகளை துரத்துவதற்காகவும்
 எத்தணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.



சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்று சீரழிப்பதற்காக மொட்டு கட்சியினர் செயற்பட்டு வருகின்றார்கள் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு நேற்று (24) இரவு நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார.

அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
முஸ்லிம் சமூகத்தினை நசுக்குவதற்காக முயற்சி செய்கின்றார்கள், எமது சமூகம் கஷ்டப்படும் போது எவரும் கவனிக்காது இருந்த நிலையில் தேர்தல் ஒன்று வந்தபோது ஏஜண்டுகளாக கண்டியிலே, மட்டக்களப்பிலே, திருகோணமலையிலே, வடக்கிலே திரிகின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்தினரை அச்சப்படுத்துகின்றார்கள். எங்களுக்கு வாக்களியுங்கள் வாக்களிக்க முடியாவிட்டால் சும்மா இருங்கள் என்றெல்லாம் எச்சக்கை செய்து அச்சமூட்டுகின்றனர். தெற்கிலே சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் வீடுகளுக்கு சென்று பயமுறுத்துவதாகவும் கட்டளையிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் மக்கள் மத்தியிலே நாங்கள் தான் உங்களை பாதுகாப்போம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் கெஞ்சுகின்றனர்.

அண்மையில் நாமல் ராஜபக்ஸ யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்களை இழிவாக பேசி சம்பவமும் நடைபெற்றுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம்.

அன்று இந்த சமூகத்திற்காக எமது பதவிகளை தூக்கி எறிந்தவர்கள் நாம். இன்று சஜித் பிரேமதாச கொலைகாரர் அல்ல, ஜனநாயகவாதி. நாம் அவரிடம் எமது கட்சி பேசியுள்ளது வடக்கு கிழக்கில் காணிப் பிரச்சினைகளை குழு அமைத்து ஒரு வருடத்தில் நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த அரசியல் எங்களுக்கு புதிதல்ல எமது சமூகத்திற்காக நாம் எமது உயிரையும் துச்சமென மதிக்காது களத்தில் இறங்கியவர்கள் நாம் எமது சமூகம் பயங்கர வாதிகளுக்கு ஒரு போதும் துணைபோக மாட்டார்கள் எமது சமூகத்திற்காக நாடாளுமன்றத்தில் அச்சமின்றி எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

புத்தளத்தில் குப்பைகளை கொட்டியதை முதலில் எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸே, இந்த நாட்டில் வில்பத்தை அழித்தவன் நான் தான் என்று எனக்கு எதிராக பல வழக்குகளை தாக்கல் செய்தார்கள், அதேபோன்று சஹ்ரானை வளர்த்தவன் நான் தான் என்றார்கள் பேரினவாதிகள் நாங்கள் அச்சம் கொள்ளவில்லை எல்லாத்திற்கும் முகம்கொடுத்தோம் ஆனால் என்மீது எந்த குற்றமுமில்லை என்று அறிவித்தார்கள்.

டாக்டர் சாபியை அநியாயமாக கைது செய்து கஷ்டப்படுத்தினார்கள், அப்பட்டமான பொய்களை சுமத்தி அவரை அசிங்கப்படுத்தினார்கள். இந்நாட்டில் ரத்ன தேரர், விமல் வீரவங்ச போன்றோர் இந்நாட்டின் பேரின வாதிகளின் தலைவர்கள் இவர்கள் தான் அனைத்தையும் மேற்கொண்டவர்கள்.

முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை அந்த பிரச்சினைகள் காரணமாக தரைமட்டமாக்கினார்கள் அபோது பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தனர். நாட்டின் சட்டத்தினை கையிலெடுத்தார்கள். முஸ்லிம் சமூகத்தினை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நசுக்குவதற்காக சிறுபான்மை கட்சிகளை துரத்துவதற்காக எத்தணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சட்டம் சரியாக இருந்ததால் அப்போது மஹிந்த வீட்டுக்கு அனுப்பினோம், சட்டம் சிறப்பாக செயற்பட்டதால் இந்நாட்டில் நாம் தலை நிமிர்ந்து நடந்து கொண்டிருக்கின்றோம் இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷர்ஃப், திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி மொஹைதீன், கட்சியின் தேசிய கொள்கை பரபரப்பு செயலாளர் கே.எம்.ஏ.ரஸ்சாக் (ஜவாத்,) அட்டாளைச்சேனை பிரதேச முன்னாள் தவிசாளர் அன்சில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top