முகம் இல்லாமல் பிறந்த குழந்தை
அலட்சியமாக மகப்பேறு செய்த டாக்டர்
6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை
போர்த்துகல் நாட்டில் முகம் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அலட்சியமாக மகப்பேறு செய்த டாக்டர் 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இருக்கும் செதுபால் நகரில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கடந்த 7-ந்திகதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த குழந்தை முகம் இல்லாமல் பிறந்திருந்தது. அதாவது, கண், மூக்கு, வாய் என்று முகத்தில் உள்ள உறுப்புகள் எதுவுமே அந்த குழந்தைக்கு இல்லை. மேலும், குழந்தையின் மண்டையோட்டின் ஒரு பகுதியே சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது.
குழந்தை சில மணி நேரங்களுக்கு மட்டுமே உயிருடன் இருக்கும் என அதன் பெற்றோர் நினைத்தனர். ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் மருத்துவமனை பாரமரிப்பில் குழந்தை உயிருடன் இருக்கிறது. அந்த குழந்தைக்கு ரொட்ரிகோ என பெயரிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் விசாரணை நடத்தியதில் மகப்பேறு டாக்டரான ஆர்ட்டர் கெர்வெல்ஹோ என்பவரின் அலட்சியத்தாலேயே குழந்தை இப்படி குறைப்பாட்டுடன் பிறந்தது தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தின் 6-வது மாதத்தில் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க குழந்தையின் தாய்க்கு ஒருமுறை ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது, குழந்தைக்கு குறைபாடு இருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், கவலைப்பட ஏதுமில்லை என்று டாக்டர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ கூறியதால் அவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் டாக்டர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ மீது ஏற்கனவே இதேபோல் 6 புகார்கள் இருப்பது தெரியவந்து இருக்கிறது. இதையடுத்து, அவர் 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment