மெழுகுவர்த்தி
ஏந்தி நினைவு கூரப்பட்ட
‘அரசியலமைப்பு
சதி’யின்
ஓராண்டு
நினைவு
இலங்கையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற
அரசியலமைப்புச் சதியின், முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி
கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அரசியலமைப்புக்கு முரணான வகையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இரவு,
பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவை,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, நியமித்திருந்தார்.
இதையடுத்து, நாட்டில் ஏற்பட்ட
அரசியல் குழப்பம் 52 நாட்கள் நீடித்தது.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த
இந்த அரசியலமைப்பு நெருக்கடி முடிவுக்கு வந்தது.
இதனை நினைவு கூரும் வகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்
நூற்றுக்கணக்கானோர் கூடி நேற்று மாலை மெழுகுவர்த்திகளை ஏந்தி கவனயீர்ப்பு
போராட்டத்தை நடத்தினர்.
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில்
பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment