கோத்தா வெற்றியுடன் சாய்ந்தமருது பிரதேசத்தை
நகரசபையாக மாற்றி தருவோம்
நான் சொன்னால் சொன்னது தான்
-சாய்ந்தமருது பிரதிநிதிகளுக்கு
மஹிந்த வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி!
சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை (தோடம்பழம்) சுயேச்சை குழு உறுப்பினர்கள் இன்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸசவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது சாய்ந்தமருது நகரசபை விடயம் பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் கோத்தா வெற்றியுடன் சாய்ந்தமருது பிரதேசத்தை நகரசபையாக மாற்றி தருவதாக நான் சொன்னால் சொன்னது தான் என மஹிந்த ராஜபக்ஸ இக் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சாய்ந்தமருதிற்கு பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தர உள்ளதாகவும் மக்கள் முன் இந்த விடயத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று 21ஆம் திகதி மாலை ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ,
பசீல் ராஜபக்ஸ ஆகியோரையும் சாய்ந்தமருது குழுவினர் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை சாய்ந்தமருது பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை மாநகர சபை சுயேச்சை குழு உறுப்பினர்கள் சிறிகொத்தா மூலமாக கடந்த வாரம் சஜித் பிரேமதாசாவுடன் பேச முயற்சித்ததாகவும்
அதற்கு சஜித்திடமிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் வருமாறு
தெரிவிக்கப்பட்டதையடுத்து சந்திப்பு கைவிடப்பட்டதாகவும் அதனையடுத்தே மஹிந்தவை சந்தித்ததாகவும் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment