சுர்ஜித் 88 அடியில் சிக்கி உள்ளான்.
தற்போது 35 அடி வரை மட்டுமே
ஆழ்துளை போடப்பட்டுள்ளது.
மீட்கும் பணி துரிதம்
தமிழக துணை முதல்வர்


மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணறில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்க, 56 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு(அக்.,27) சம்பவ இடத்திற்கு வந்த தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சுர்ஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் அளித்த அவர், செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அவர் கூறியதாவது: சம்பவம் நடந்த ஒரு மணிநேரத்திலேயே அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில், சுர்ஜித் 88 அடியில் சிக்கி உள்ளான். தற்போது 35 அடி வரை மட்டுமே ஆழ்துளை போடப்பட்டுள்ளது. சுர்ஜித்தை உயிரோடு பத்திரமாக மீட்கும் பணியில் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தனிமனித உயிர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மீட்புப்பணிகளை அமைச்சர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top