`அவர்கள் இருவரையும் முந்திவிட்டாள்!'
- 3வது குழந்தையின் எடையைக் கேட்டு
அதிர்ச்சியடைந்த பெற்றோர்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டேனியல் - எம்மா மில்லர் தம்பதிக்கு, 5.8 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்திருக்கிறது. 'குழந்தை இப்போதும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை.

பிறக்கும் முன்பு குழந்தையின் எடை அதிகமிருக்கும் எனத் தெரிந்திருந்தாலும்கூட, எடை இவ்வளவு அதிகமிருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

தாயால் இதற்கு மேல் எடையைத் தாங்க முடியாது என்பதால், `எமெர்ஜென்சி கேர்' என்ற அடிப்படையில் அவசர சிகிச்சையாக சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ள எம்மா மில்லர், "எங்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும்கூட, சராசரியான குழந்தையின் எடையைவிட அதிக எடையில்தான் பிறந்திருந்தார்கள். நான்கு வயதாகும் எங்களின் மூத்த மகன் ஏஸ் (Ace) 3.8 கிலோ எடையுடனும், இரண்டு வயதாகும் மகள் வில்லோ (Willow) 5.5 கிலோ எடையுடனும் பிறந்திருந்தனர். இவள், அவர்கள் இருவரையும் முந்திவிட்டாள்" என்று தெரிவித்துள்ளார்.

எம்மாவின் கர்ப்பத்தில், 35-வது வாரத்தின் முடிவில், `நான்கு கிலோவுக்கு மேல் குழந்தையின் எடை இருக்கிறது' என அல்ட்ரா சவுண்டில் தெரிய வரவே, அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர் மருத்துவர்கள். பிறக்கும் முன்பு குழந்தையின் எடை அதிகமிருக்கும் எனத் தெரிந்திருந்தாலும்கூட, எடை இவ்வளவு அதிகமிருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர். பெற்றோருக்கும் இது இன்ப அதிர்ச்சிதான்!

குழந்தை தற்போதைக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் நலமுடம் திரும்புவாள் என்றும், பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளனர், டேனியல் - எம்மா தம்பதி.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top