கனடா
பாராளுமன்ற தேர்தல்
-
மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
-
முஸ்லிம்களின் சிறப்பான பங்களிப்பு!!
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி
அமைப்பதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகிறார்.
நிலப்பரப்பில் உலகின் 2-வது மிகப்பெரிய நாடாக விளங்கும்
கனடாவில் 338 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல்
நடைபெற்றது.
இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல்
கட்சிக்கும், ஆண்ட்ரூ ஷீர்
தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு
முடிந்தவுடன், வாக்குகளை
எண்ணும் பணி தொடங்கியது.
இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை
கிடைக்கவில்லை. ஆனாலும், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி, 157 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு
121 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்கிற நிலையில்,
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 13
எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது.
அந்த வகையில் இந்திய வம்சாவளி சீக்கியரான ஜக்மித் சிங்கின்,
புதிய ஜனநாயக கட்சி
ஆதரவுடன், ஜஸ்டின் ட்ரூடோ
மீண்டும் ஆட்சியமைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மத்தியில் அதிகம்
வரவேற்பை பெற்ற புதிய ஜனநாயக கட்சி 20 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதன் மூலம் ஜஸ்டின்
ட்ரூடோ தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராகிறார்.
-
முஸ்லிம்களின் சிறப்பான பங்களிப்பு!!
திங்களன்று நடந்து முடிந்த தேர்தலில் சிறுபான்மையின
மக்களுக்கு அனைத்துக் கட்சிகளும் நல்ல பிரதிநித்துவத்தைக் கொடுத்தன.
இதில் லிபரல் கட்சியின் சார்பாக அதிகமான சிறுபான்மையினர்
வெற்றிபெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக 11 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்
வெற்றிபெற்றுள்ளனர். இதில் 4 முஸ்லீம் பெண்கள் வெற்றிக்கண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட,
யார் வெற்றி பெறக்கூடாது
என்ற உறுதியான கண்ணோட்டத்தில் மக்கள் வாக்களித்ததால் தான் இப்போதைய பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ அதிகமான சீட்டுகளை பெற முடிந்தது.
எப்போது கட்சி, இயக்க பாகுபாடு மற்றும் பணத்திற்காக இல்லாமல் மக்கள்
தங்களின் ஓட்டுரிமையை செலுத்துகின்றார்களோ அப்போது தான் சரியான ஆட்சியாளர்களை பெற
முடியும். ஓரளவிற்க்காகவாவது மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்.
0 comments:
Post a Comment