கிளின் அரசியல்வாதியே
ஜனத்திரளான மக்கள் மத்தியில்
வழங்கிய வாக்குறுதியையே
 மழுப்பி பேசிய நிலையில்
முக்கியமான அரசியல் தலைவர்கள் ஒப்பமிடாத
இந்த ஒப்பந்தத்திற்கு என்ன உத்தரவாதம்?
மக்கள் கேள்வி!

சாய்ந்தமருது பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ,இடையிலான சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தொடர்பான பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்குதல் என்ற உடன்பாட்டை எழுத்து வடிவில் ஒப்பந்தத்தை  இருதரப்பினரும் செய்துகொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளதல்லவா?

கடந்த 2015 ஆம் ஆண்டு தற்போதய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான ஜனத்திரள் மத்தியில் வழங்கப்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தொடர்பான வாக்குறுதி கூட அது எனக்கு எழுதித் தந்து வாசிக்கச் சொன்னவைகள் என்று மழுப்பிக் கூறப்பட்டது மக்கள் அறிந்த விடயம்.

இதே போன்று சாய்ந்தமருது பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ ,இடையிலான சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை தொடர்பான பேச்சுவார்த்தையின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்குதல் என்ற உடன்பாட்டை எழுத்து வடிவில் எழுதி ஒப்பமிட்டவர்களில் மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ யாராவது ஒப்பமிட்டுள்ளார்களா?

இல்லை ஒப்பந்தம் ஒப்பமிட்ட இடத்தில் இவர்கள் மூவர்களில் எவராவது வருகை தந்து சாட்சிக்காவது ஒப்பமிட்டுள்ளார்களா? ஒப்பந்தம் கூட மஹிந்தவால் வழங்கப்படாமல் எம்மவரே பள்ளிவாசல் தலைவரிடம் வழங்குகிறாரே என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாய்ந்தமருது மக்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிக்க வைப்போம் என சுயேட்சைக் குழு உறுப்பினர்கள்தான் ஒப்பமிடுகின்றனர். அந்தப் பக்கத்திலிருந்து அறிமுகமில்லாத ஒரு நபர் (அவர் கட்சியின் செயலாளராக இருந்தாலும்) ஒப்பமிடுகின்றார்.

ஜனத்திரளான மக்கள் மத்தியில் வழங்கப்பட்ட வாக்குறுதியையே வீண் பேச்சுக்களால் புரட்டிப்பேசி மிஸ்டர் கிளின்  அரசியல்வாதி என வர்னிக்கப்பட்ட ரணில் உட்பட ஏனைய அரசியல்வாதிகளே வாக்குறுதில் இருந்து நழுவியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தமும் நாளை ஒப்பந்தத்தில் எங்கள் மூவரில் யாராவது ஒப்பமிட்டுள்ளோமா? ஒப்பந்தம் செய்யும் இடத்தில்தான் நாங்கள் இருந்தோமா?  என்ற கேள்வியை எழுப்பமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் வழங்கமுடியும் என மக்கள் வினவுகின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top