சுஜித்தை
மீட்க 'ரிக்' இயந்திரம்
மூலம்
துளை
அமைக்கும் பணி தொடக்கம்
விரைவில்
மீட்க வாய்ப்பு உள்ளதாக
நம்பிக்கை
தெரிவிப்பு
திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில்
விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 37 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா
பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சி
தோல்வியடைந்ததையடுத்து, தற்போது 'ரிக்' இயந்திரம் மூலம் குழந்தையை மீட்க முடிவு
செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆழ்துளைக் கிணறு உள்ள இடத்திற்கு ஓ.என்.ஜி.சி.,யின் ரிக் இயந்திரம் சம்பவ இடத்திற்கு
வந்தடைந்தது. இதன் மூலம் 110 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்ட பின் குழந்தை
சிக்கியுளள குழிக்கு சுரங்கப்பாதை அமைத்து குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.
3 வீரர்கள் குழிக்குள் இறங்க உள்ளனர். குழி தோண்டி முடிக்க 4 மணி நேரம் ஆகும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி இன்று காலை 7
மணியளவில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணி நேரத்தில் 100 அடி வரை
இதனால் குழி தோண்ட முடியும் என்பதால் சுஜித்தை விரைவில் மீட்க வாய்ப்பு உள்ளதாக
நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment