சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும்
ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் சந்திரிக்கா!
கடும் அதிருப்தியில் கோத்தபாய
பிளவடைந்துள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆரம்பித்துள்ளார்.
சுதந்திர கட்சியை மீட்கும் நோக்கில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பெருமளவு சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் அடங்கும்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கோத்தபாய வெற்றி பெற்றால் சுதந்திரக் கட்சி அழிவடையும் நிலைமை ஏற்படும் என்பதால் அதனை தடுத்து நிறுத்தும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டுமென இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சுதந்திர கட்சியின் மாற்று அணியினரின் விசேட கூட்டமொன்று எதிர்வரும் ஐந்தாம் திகதி சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை கோத்தபாயவுக்கு ஆதரவாக பிரச்சார மேடைகளில் ஏறும் சுதந்திர உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவமானப்படுத்தப்பட்டு வருகின்றர். மேடையில் உரையாற்றும் போது தொண்டர்களால் கூச்சலிட்டு அது தடுக்கப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடும் அதிருப்தி அடைந்துள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சந்திரிக்கா தலைமையிலான அணுயுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதனால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ கடும் விரக்தி நிலையை அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment