சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
பல உறுதிமொழிகள் முன்வைப்பு
நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் நான் கட்டுப்படவில்லை, இலங்கையின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் உடன்பாடு குறித்து கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் வைத்து இன்றையதினம் வெளியிடப்பட்டது.
இதன்படி, தனது விஞ்ஞாபனத்தின் முதல் பிரதிகளை அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பில் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதில் ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், ஆகிய வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment