திருப்பதியிலிருந்து நாடு திரும்பினார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ




இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, இன்று முற்பகல் நாடு திரும்பினார் என அறிவிக்கப்படுகின்றது.
திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  நேற்று இரவு திருப்பதிக்குசென்றிருந்தார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்து அங்கிருந்து நேரடியாக இலங்கை புறப்பட்டு வந்தடைந்தார்.
அவரது திருப்பதி வருகை காரணமாக திருப்பதியில் தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருப்பதி சென்ற ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமொன்று திருப்பதியில் நடைபெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top