மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை
கட்டுப்படுத்தும் புதிய சட்டம்
10ஆம் திகதி
தொடக்கம் நடைமுறை
போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்
விபத்து ஏற்படுவதற்கான
4 காரணங்கள்
1.பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினை பொறுத்தாதிருத்தல்
2. பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியாமை.
3.முன்னால் இலகுவாக பயணிக்கக்கூடியதாக இருந்த போதிலும் ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சிக்கின்றமை.
4.கட்டுப்படுத்த முடியாதளவு வேகத்தில் பயணிக்கின்றமை
இவ்விடயங்களைக்
கருத்திற்கொண்டு எதிர்வரும் 2015.06.10 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு
வரும் வகையில்
கீழே கூறப்பட்ட
சட்டங்களை பின்பற்றாவிட்டால்
கடுமையான சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
1. பாதுகாப்பு தலைக்கவசங்களின் தாடைப் பட்டியினைப் பொறுத்தாமல் ஓட்டுதல்.
2.பலவர்ணம் கொண்ட தலைக்கவச வைசரை உபயோகித்தல்.
3.ஏனைய வாகனங்களை முந்திக்கொண்டு பயணிக்க முயற்சித்தல்
ஆகிய
குற்றங்களை மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு
எதிராக கடுமையான
சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment