முதியோரின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில்
அரசியல் தலைமைகள் அக்கறை
காட்ட வேண்டும்!
தலைவர், சிரேஷ;ட பிரஜைகள் ஒன்றியம்
பாராளுமன்றத் தேர்தல் (2015) அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் கட்சித்தலைமைகளுக்கும் அன்பான வேண்டுகோள்!
மேற்படித்
தேர்தலில் வேட்பாளர்களாகத்
தாங்கள் களமிறங்கி
நீங்கள் சார்ந்த
சமூகத்திற்கு சேவையாற்ற உங்களை அர்ப்பணித்துள்ளமைக்கு.எமது பாராட்டுக்கள்!
இம்மாவட்டத்தில்
வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களில் 20 சதவீதத்திற்கு அதிகமானவர்கள்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் என்பதைத் தாங்கள்
அறிவீர்கள். ஆயினும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப்
பெற்றுக் கொடுப்பதில்
அரசியல் தலைமைத்துவங்கள்
அக்கறை செலுத்துவது
குறைவாகக் காணப்படுகின்றது.
எனவே
பின்வரும் முதியோர்களின்
தேவைகள் மற்றும்
பிரச்சினைகள் தொடர்பாக நீங்கள் கரிசனை செலுத்த
வேண்டும் என்பதுடன்
எதிர்வரும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இவை
தொடர்பாக உங்கள்
தூர நோக்கு,
திட்டங்கள்,இலக்குகள் என்பன பற்றி விரிவாகப்
பேச வேண்டும்
எனவும் கனிவுடன்
வேண்டுகின்றோம். இதன் மூலம் இவை தொடர்பான
உயர்மட்ட கருத்துப்பரிமாறல்களை
எதிர்பார்க்கின்றோம்.
முதியோர்
பிரச்சினைகள்
1.சுதந்திரம்
முதியோருக்கும்
அவர்களுடன் தங்கி வாழும் பிள்ளைகளுக்கும் வதிவிடம்,
வாழ்வாதாரம,; தொழில் வாய்ப்பு இல்லாமை.
2.கவனிப்பு
முதியோரைக்
கவனிப்பதற்கான சேவைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கான பொறிமுறையொன்று
இல்லாமை. ஓவ்வொரு
பிரதேசத்திலும் முதியோர் கவனிப்பு நிலையம் மற்றும்
பிரதேச வைத்தியசாலைகளில்
முதியோர் பிரிவு
என்பன செயற்படாமை.
3.பங்கேற்பு
சமூகத்தில்
சில குறிப்பிட்ட
பதவிகள் முதியோருக்கு
என ஒதுக்கப்படாமையும்
சில சமூக
மற்றும் குடும்ப
நிகழ்வுகளில் முதிNயுhர் அழைக்கப்படாமையும்.
4.கௌரவம்
சமூகத்திற்கு
சிறந்த சேவையாற்றிய
முதியோர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படாமையும்
சில பொது
ஸ்தாபனங்களில் முன்னுரிமையும் வசதிகளும் வழங்கப்படாமையும்
5.தன்னிறைவு
முதியோர்கள்
தமக்குத் தேவையான
தகவல்கள்,மற்றும்
அறிவு பெறவும்
தொழில் செய்யவும்
சமயக்கிரியைகளில் ஈடுபடவும், பொழுது போக்கு மற்றும்
தேகப்பியாசம் செய்யவும் வசதி வாய்ப்பு இல்லாமை.
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்
தலைவர்,
சிரேஷ;ட
பிரஜைகள் ஒன்றியம்
சாய்ந்தமருது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.