மர்மமான முறையில் மரணமான றகர் விளையாட்டு வீரர்

வசீம் தாஜுதீனின்ஜனாஸாவைதோண்டஅனுமதி!


2012ஆம் ஆண்டு மர்மமா முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸாவை எதிர்வரும் 10ஆம் திகதி தோண்டியெடுப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான், குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதிவழங்கியுள்ளார்.
2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸா தோண்டியெடுப்பதற்கு அனுமதி வழங்குவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், நேற்று புதன்கிழமை அறிவித்திருந்தார்.
பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது ஜனாஸா புதைக்கப்பட்டுள்ள மையவாடிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாரஹேன் பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.

அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top