சதித் திட்டம் தொடர்பிலான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது

-ரிசாத் பதியுதீன்

தேர்தல் நெருங்கும் இந்த வேளை சந்தர்ப்பம் பார்த்து எதிர்காலத்தில் என்னை முழுமையாக அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரம் கட்டுவதற்கும் எனது சமுகத்தை பாதாளத்திற்குள் தள்ளிவிடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டிருந்த சதித்திட்டம் அம்பலாமாகியுள்ளது. இதற்கான ஆதாரம் ஒளி,ஒலி வடிவிலான சிடியில் உள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து முறைப்பாடொன்றை கொடுத்துள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து காணி விவகாரம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக சுற்றுச் சூழல் அமைப்பொன்றால் தொடப்பட்ட வழக்கு விசாரணைக்கு அமைச்சருமான ரிஷாட்க்கு அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் முகமாக நேற்று மதியம் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அங்கு தெரிவிக்கையில:
வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப் படுத்தும் வகையில்பரிசர யுக்திகேந்ரயஎனும் சுற்றுச் சூழல் அமைப்பின் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மீது பிரதானமாக குற்றம் சுமத்தப்பட்டு எதிர் வரும் செப் 16ந் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சமகால பிரச்சினைகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரலெழுப்பி வருவதை இவ்வினவாத அமைப்புகள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றன. தற்போது நாக பாம்பு வேடம் தரித்து பாராளுமன்றம் புக நினைக்கும் இவ்வினவாதிகளின் பிரதான இலக்காக இருந்து வருகின்றார்.
இனவாத குழுவினரின் பின்னணயில் இருப்பவர் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர். எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசியலிலிருந்து என்னை வீழ்த்துவதற்கே எத்தனிக்கின்றார். இவரது இந்த வித்ததை தொடர்பான சகல ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றது.வெகுவிரைவில் இந்தக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தினை தக்க ஆதாரத்தினை சட்டத்தின் முன் கொண்டு வருவேன்.

கடந்த இருவருடங்களாக ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைத்தோங்கியிருந்தது. இதற்கு முழுக்காரணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதியே. இவர் பொதுபலசேன அமைப்பின் இனவாதச் செயற்பாட்டை கட்டுப்படுத்தவில்லை. அசமந்தப் போக்குடன் இருந்தார். இதனால் இவருக்கு வீடு செல்வதற்கான சந்தர்ப்பத்தினை எமது சமுகம் வழங்கியது. இவர் நேர்மையாக இருந்திருந்தால் இன்னும் 10 வருடங்கள் இருந்திருக்கலாம் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top