வங்காளதேசத்தில் இந்திய டி.வி. நாடகத்தால் கலவரம்
பொலிஸ் ரப்பர் குண்டு சூட்டில் 100 பேர் காயம்
வங்காளதேசத்தில் இந்திய டி.வி. நாடகத்தால் ஏற்பட்ட கலவரத்தை அடக்க பொலிஸ் ரப்பர் குண்டு சூடு நடத்தியதில் 100 பேர் காயம் அடைந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள ஒரு பிரபல டி.வி.யில் கிரன்மாலா என்ற ஒரு டி.வி. நாடகம் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. ஆவிகளிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றும் இளவரசியை பற்றிய கதையாகும்.
இத்தொடர் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த டி.வி. நாடக தொடருக்கு வங்காள தேசத்தில் அதிக மவுசு உள்ளது. இந்த நிலையில் நேற்று வங்காள தேசத்தில் ஹபிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள டோல் என்ற கிராமத்தில் பொதுமக்கள் ‘கிரன் மாலா’ டி.வி. தொடரை பார்த்தனர்.
அங்குள்ள ஒரு ஹோட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 பேர் இத்தொடர் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது கைகலப்பு ஏற்படவே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உருட்டுக்கட்டைகள் மற்றும் கத்தியால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து சென்று கலவரத்தை அடக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. எனவே, கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பொலிஸார் சுட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
0 comments:
Post a Comment