லிபியா இரட்டை
வெடிகுண்டுத் தாக்குதலில்
அரசுக்கு ஆதரவான
ஆயுதக் குழுவினர் 10 பேர் பலி
லிபியாவில்
இஸ்லாமிய தேச
பயங்கரவாதிகள் நிகழ்த்திய இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில்
அரசுக்கு ஆதரவான
ஆயுதக் குழுவினர்
10 பேர் பலியாகினர்.
சர்வதேச
அங்கீகாரம் பெற்ற தேசிய அரசுக்கு ஆதரவாகச்
செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவினரின் செய்தித்
தொடர்பாளர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
லிபியாவின்
சிர்டே நகருக்கு
அருகே கர்பியாத் என்னும் இடத்தில்
உதவிப் பொருள்கள்
கிடங்கைக் குறி
வைத்து இஸ்லாமிய
தேச பயங்கரவாதிகள்
வியாழக்கிழமை கார் வெடிகுண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தினர். இந்த இரட்டை வெடிகுண்டுத்
தாக்குதலில் 10 பேர் பலியாகினர். மேலும் 20 பேர்
காயமடைந்தனர்.
இஸ்லாமிய
தேச பயங்கரவாதிகள்
வசம் இழந்த
சிர்டே நகரை
முற்றிலும் மீட்க அமெரிக்க வான்வழித் தாக்குதல்
உதவியுடன் லிபியா
அரசுப் படைகளும்
அவர்களுக்கு ஆதரவாக ஆயுதக் குழுக்களும் போரிட்டு
வருகின்றன.பெரும்பாலான
பகுதிகள் அரசு
கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில்,
சில இடங்கள்
இன்னும் பயங்கரவாதிகள்
வசம் உள்ளது.
இந்த நிலையில்,
ஐ.எஸ்.
தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் என்று அவர்
கூறியுள்ளார்.
லிபியாவின்
முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் சொந்த ஊர்
சிர்டே என்பது
குறிப்பிடத் தக்கது. அதனை முழுவதும் மீட்க
சர்வதேச அங்கீகாரம்
பெற்ற அரசின்
படைகள் கடும்
தாக்குதலை மேற்கொண்டு,அதில் பெருமளவு
வெற்றி கண்டு வருகின்றனர் என
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment