தமிழ் புறக்கணிக்கப்படுகின்றதா?
இலங்கையில்
உள்ள பெரும்பாலான
அரச திணைக்களங்களில்
உள்ள பெயர்
பலகையிலும், வாகனங்களிலும் தொடர்ந்தும் தமிழ் மொழியை
பிழையாக பிரயோகித்து
வருகின்றனர்.
இதை
பறைசாற்றும் முகமாக பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம்
ஒன்றில் சூழல்
பாதுகாப்பு பிரிவு என்பதற்கு "துழல் பாதுகாப்பு
மரீவு" என்று எழுதப்பட்டுள்ளது.
இது போன்று இராஜகிரியவில்
அமைந்துள்ள வங்கி தொழில் கற்கைளுக்கான நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஒன்றிலும் தமிழ்
பிழையாக எழுதப்பட்டுள்ளது.
குறித்த
விளம்பர பலகையில்
“கடன் ஆலோசனை
நிலையம்” என்பதற்கு
பதிலாக “கடன்
ஆலொசனை நிலையம்”
என தவறுதலாக
எழுதப்பட்டுள்ளது
எனவே
இது போன்ற
தவறுகளை சரி
செய்வதுடன் இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுவது
அரசினதும் அரச
திணைக்களங்களினதும் தலையாய கடமையாகும்
எனவும் சமூக
ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment