தந்தையின் எதிர்ப்பை மீறி 10 வயது மூத்த பெண்ணை
திருமணம் செய்த கோலாகலம் படத்தின் ஹீரோ நடிகர்
தந்தையின்
எதிர்ப்பை மீறி
தன்னை விட
10 வயது மூத்த
பெண்ணை நடிகர்
ஒருவர் திருமணம்
செய்து கொண்டார்.
திருச்சியை
சேர்ந்த சுரேந்திரன்
என்பவர் கட்டுமான
நிறுவனம் நடத்தி
வருகிறார், இவர் கோலாகலம் என்ற திரைப்படத்தை
தயாரித்து இயக்கினார்.
திருச்சி
கே.கே.நகர் ராணி
அண்ணாத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (50 இவரது
மகன் மலையமான்
(25). கோலாகலம் படத்தின் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில்,
இவருக்கும், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த
அமுதாவின் மகள்
தீபாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அமுதா,
மலையமானை விட
10 வயது அதிகம்
என்பதாலும், வேற்று சமூகத்தினரைச் சேர்ந்தவர் என்பதாலும்,
இவர்களது காதலுக்கு
சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தனது
தந்தையின் எதிர்ப்பையும்
மீறி அமுதாவை
திருமணம் செய்ய
முடிவு செய்து
திருமண பத்திரிக்கையும்
அடித்துள்ளார்.
இதனை
கண்ட சுரேந்திரன்,
தனது மகனை
கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று
பெண் வீட்டார்
பற்றி கே.கே.நகர்
பொலிஸில் புகார்
தெரிவித்தார்.
இதன்
காரணமாக இருவரையும்
அழைத்து பொலிஸார்
விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில்
அவர்கள் இருவரும்
மேஜர் என்பது
தெரியவர அவர்களது
திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இதற்கிடையே
நிச்சயிக்கப்படி நேற்று மலையமான் மற்றும் தீபா
திருமண ஏற்பாடுகள்
தடபுடலாக நடந்தது.
மீண்டும் எப்படியாவது
இந்த திருமணத்தை
தடுத்து நிறுத்த
வேண்டும் என்று
எண்ணிய சுரேந்திரன்
திருச்சி மாநகர்
பொலிஸ் கமிஷனரிடம்
புகார் கொடுத்தார்.
ஆனால்,
ஏற்கனவே இது
தொடர்பாக கே.கே.நகர்
பொலிஸ் விசாரித்து
இருவர்களது விருப்பத்துடன் இந்த திருமணம் நடக்கயிருக்கிறது
என்பது தெரியவர,
திருமணத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை.
இதைத்
தொடர்ந்து மலையமான்
மற்றும் தீபா
திருமணம் திட்டமிட்டப்படி
நேற்று நடந்து
முடிந்தது. இது தொடர்பாக சுரேந்திரன் கூறியதாவது:
கோலாகலம் படத்தின்
மூலம் ஹீரோவாக
அறிமுகமான எனது
மகன் மலையமான்,
10 வயது மூத்த
பெண்ணை திருமணம்
செய்ய முடிவு
செய்தார். இதற்கு
நான் சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் எனது மகனை கடத்து வீட்டு
சிறையில் வைத்து
திருமணம் திருமணம்
நடத்தி உள்ளனர்.
மாய வலையில்
விழுந்த எனது
மகன் விபரம்
தெரிந்த பிறகு
மீண்டும் என்னிடம்
வந்து சேர்ந்துவிடுவான் என்று
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment