கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த
ஆண்டு இந்தியா சென்றிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி
அணிந்திருந்த ஆடை (கோட்-சூட்), "அதிக
தொகைக்கு ஏலத்துக்கு
எடுக்கப்பட்ட ஆடை' என்ற தலைப்பில் கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த
ஆடையை ஏலத்தில்
எடுத்த குஜராத்தைச்
சேர்ந்த தொழிலதிபர்
லால்ஜிபாய் துளசிபாய் படேலின் மகன் ஹிதேஷ்
படேல், சூரத்தில்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர்
மோடியின் ஆடையை
ஏலத்தில் எடுத்ததை
அடுத்து, கின்னஸ்
புத்தகத்துக்கு விண்ணப்பிக்குமாறு எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள்
யோசனை தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து,
கடந்த 5 மாதங்களுக்கு
முன்பு கின்னஸ்
சாதனைப் புத்தகத்துக்கு
விண்ணப்பித்திருந்தோம். அதைப் பரிசீலித்த
கின்னஸ் புத்தக
நிறுவனத்தினர், "அதிக தொகைக்கு
ஏலம் எடுக்கப்பட்ட
ஆடை' என்ற
தலைப்பில் பிரதமர்
மோடி அணிந்திருந்த
ஆடை கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக, எங்களுக்கு
சான்றிதழ் அனுப்பியுள்ளனர்
என்று ஹிதேஷ்
படேல் தெரிவித்துள்ளார்.
கடந்த
ஆண்டு ஒபாமா
இந்தியா சென்றிருந்தபோது,
பிரதமர் மோடி
அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடையில் வரிசையாக,
"நரேந்திர தாமோதர்தாஸ் மோடி' என்று தங்க
ஜரிகை எழுத்துகளால்
பொறிக்கப்பட்டிருந்தது. இதன் விலை
ரூ.80,000 முதல்
ரூ.5 லட்சம்(இந்திய
ரூ) வரை இருக்கக்கூடும் என்று கூறப்பட்டதால்,
எதிர்க்கட்சிகள் மோடியை "ஆடம்பர பிரியர்' என்று
கடுமையாக விமர்சித்தன.
இதைத்
தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்
இந்த ஆடை
ஏலம் விடப்பட்டது.
ரூ.11 லட்சத்துக்கு(இந்திய
ரூ) ஏலம் தொடங்கியது. அப்போது, சூரத்தைச்
சேர்ந்த வைர
வியாபாரியும் தனியார் விமானச் சேவை அதிபருமான
லால்ஜிபாய் துளசிபாய் படேல், ரூ.4.31 கோடிக்கு(இந்திய
ரூ) இந்த ஆடையை ஏலம் எடுத்தார்.
இந்த ஏலத்தின்
மூலம் கிடைக்கும்
வருவாய் மத்திய
அரசின் கங்கை
நதி புனரமைக்கும்
திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி
அறிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment