ஏறாவூரில் நடு இரவில் 121 முஸ்லிம்கள்
படுகொலை செய்யப்பட்ட நாள்
இன்று 26வது ஷுஹதாக்கள் தினம்
12.8.1990ல் ஏறாவூரில் நடு இரவில்
121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை நினைவு
கூறும் 26வது
வருட ஷுஹதாக்கள்
தினம் இன்று(12.8.2016)
வெள்ளிக்கிழமை ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனைமுன்னிட்டு
ஷுஹதாக்களை அடக்கம் செய்யப்பட்டுள்ள ஏறாவூர் மஸ்ஜிதுல்
நூறுஸ்ஸலாம் (காட்டுப்பள்ளிவாயலில்) இன்று
வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையைத் தொடர்ந்து ஏறாவூர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம்கள் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்
குர்ஆன் ஓதுதல்,
விஷேட துஆப்பிராத்தனை
போன்ற நிகழ்வுகள்
நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர்
பள்ளிவாயல்கள் முஸ்லிம்கள் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர்
ஏ.சி.எம்.சஹீத்
தலைமையில் நடைபெறவுள்ள
இந்த நிகழ்வில்
பலரும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
12.8.1990ல் ஏறாவூர் சதாம் ஹுஹைன்,
ஐயங்கேனி உட்பட
ஏறாவூர் எல்லைப்பிரதேசங்களில்
தூங்கிக் கொண்டிருந்த
போது குழந்தைகள் பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள்
இளைஞர்கள் என 121 முஸ்லிம்கள் நடு இரவில்
தமிழீழ விடுதலைப்புலிகளினால்
வெட்டியும் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.
கர்ப்பினித்தாயின்
வயிற்றுக்குள் இருந்த சிசுவைக் கூட இவர்கள்
வெட்டி கொலை
செய்தமை இங்கு
குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment