சாரதிகளும் நாங்களே நடத்துநர்களும் நாங்களே!
மாவட்டத்தில் 1/5
பங்கு தூரத்திற்கு
பஸ்ஸை வெறுமையாகவே செலுத்திவிட்டார்கள் என
மக்கள் கவலை
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று இன்றுடன் (17.08.2016) ஒரு வருடம்
ஆகிவிட்டது. அம்பாறை மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே நடத்துநர்களும்
நாங்களே! என்று கூறும் எமது மக்கள் பிரதிநிதிகள் மாவட்டத்தில் பஸ்ஸை 1/5 பங்கு தூரத்திற்கு
வெறுமையாகவே செலுத்திவிட்டார்கள் என வாக்களித்த மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நல்லாட்சியில் கிடைத்திருக்கும் நல்லதொரு சந்தர்ப்பத்தை
மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு
காணாமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் மக்கள் கூறுகின்றார்கள்.
இன்னும் இம்மாவட்ட பஸ்ஸை சாரதிகளாகவும் நடத்துநர்களாகவும் 4
வருடங்களுக்குத்தான் தற்போதய நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் செலுத்தமுடியும்.
இன்னும் இருக்கும் சில காலங்களுக்குள் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாக வேண்டும். இல்லையேல் இவர்களும்
ஏனைய கட்சிக்காரர்கள் போன்று மக்களை பொய் வாக்குறுதிகள் வழங்கி ஏமாற்றியவர்கள். இவர்கள்
மக்கள் சேவைக்கு கையாலாகாதவர்கள் என்ற அவப்பெயரை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கவேண்டியிருக்கும்
என்றும் வாக்களித்த மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் நீண்டகாலமாக பல பிரச்சினைகளும் தேவைகளும் இருந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் சில :-
-பொத்துவில் முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை (இறத்தல், கரங்கோ, பொத்தான, தகரம்பொல, உடும்புக்குளம் ஆகிய காணிகள்) முஸ்லிம் மீனவர் பிரச்சினை, பாதுகாப்புத் தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை உடன் தீர்த்து வைத்தல்.
-அக்கரைப்பற்று - முஸ்லிம்களின் வட்டமடு மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்
-முன்னாள் அமைச்சா் பேரியல் அஸரபினால் சவூதி அரசினால் வழங்கப்பட்ட
500 வீடுகள் கொண்ட சுனாமி வீடமைப்புத் திட்டம் வீடில்லாமல் வாழும் முஸ்லீம் குடும்பங்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
-சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் இளைஞா்களுக்கான தொழில் வசதி வாய்ப்புக்கான தொழில் பேட்டைகள்
- நுரைச்சோலையில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள பொருத்தமான தீர்வை வழங்க வேண்டும்.
- அட்டாளைச்சேனை - அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திரடமிருந்து மீட்டுத் தர வேண்டும்.
- ஒலுவில துறைமுகத்திட்டத்தினால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு உடன் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுத்தல், கடலரிப்பை தடுக்க உரிய திட்டத்தை வகுக்க வேண்டும்.
- ஓலுவில் துறைமுகம் மீன்பிடித்துறைமுகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்தல்
- கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் வைத்தியா, தாதியா் விடுதிகள் மற்றும் கட்டிட வசதிகள் இன்மை.
- கல்முனை ஸாஹிராக் கல்லுரிக்கு கட்டிடங்கள் மற்றும் கூட்ட மண்டபம், மைதாணம் போன்ற குறைபாடுகள் நிவா்த்தி செய்யப்படல் வேண்டும்
-சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை பிரகடனப்படுத்துவதற்கான கால எல்லையை அறிவிக்க வேண்டும்.
- சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும் குடியிருப்பு நிலப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கான செயலணியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
- மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை உண்மையாக பாதிப்புற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவந்து சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும்
- கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனை நவீன நகரமாக நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- கல்முனை மாநகர சபைக்கு சகல வசதிகளும் கொண்ட செயலகம் நிர்மாணிக்கப்படல் வேண்டும்
- சம்மாந்துறை - அம்பாறை நகருக்கிடைப்பட்ட முஸ்லிம்களின் விவசாயக் காணிப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தரமுயா்த்தப்பட்டு கல்முனையில் மீள ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
- மட்டக்களப்பு புகையிரத பாதை கல்முனை- பொத்துவில் வரை விஸ்தரிக்கப்படல் வேண்டும்.
- அட்டாளைச் சேனையில் உள்ள கல்விக் கல்லுாரி ஆசிரிய பல்கலைக்கழக கல்லுரரியாக தரமுயத்தப்படல் வேண்டும். அத்துடன் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை அபிவிருத்தி செய்தல்,
- யுத்த காலத்தில் பயங்கரவாதிகளினால் உயிழந்தவா்களுக்கு நஸ்ட ஈடு மற்றும் உயிரிழந்து முஸ்லிம் பொலிஸ், ஊர்காவல் படை அவா்களது குடும்பங்களுக்கு நஸ்ட ஈடுகள் மற்றும் வீடமைப்புத் திட்டங்கள்
- கல்முனையில் உள்ள நகர அபிவருத்தி உப அலுவலகமும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகமும் கரையோர மாவட்ட அலுவலகமாக தரமுயா்த்தப்படல் வேண்டும்.
-சாய்ந்தமருதில் மீன்பிடித்துறை முகம், ஜஸ் தொழிற்சாலை நிர்மாணிக்கப்படல் வேண்டும்.
- சாய்ந்தமருது தொட்டு காரைதீவு, நிந்தவூர்வரையிலான, தோணா மற்றும் அதனிடையே வரும் பாலங்கள் மற்றும் இருமருங்கிலும் செப்பணிட்டு பூங்காங்கள் அமைத்து அழகுபடுத்தப்படல் வேண்டும்.
- முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தில் ஒழிந்துள்ள மர்மத்தை கண்டறிய விஷேட ஆணைக்குழு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல்
வேண்டும்
0 comments:
Post a Comment