அதிக எடையுடன் பிறந்த குழந்தை!
தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் 5 கிலோ 100 கிராம் எடையுடன் ஆண் குழந்தைஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை பகல், 12:30 மணிக்கு பிறந்துள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், பட்டு சேலைகளுக்கு மாதிரி வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு செவ்வாய்க்கிழமை சுகப்பிரசவத்தில் 5 கிலோ 100 கிராம் எடை கொண்ட அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழகத்திலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற பெருமையையும் இக்குழந்தை பெற்றுள்ளது. இவர்களுக்கு திருமணமான முதல் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அக்குழந்தை பிறந்த உடனேயே இறந்தது. இதைத் தொடர்ந்து ஒரு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது மூன்றாவதாக பானுமதிக்கு அதிக எடையுடன் கூடிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த அளவில் எடை அதிகமான குழந்தை பிறக்கும் போது பிரசவகால சிக்கல்கள்
ஏற்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பிறப்பது வழக்கமாக இருந்தாலும், தமிழகத்தில் சுகப்பிரசவத்தின்
மூலம் அதிக அளவு எடையுடன் குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என காஞ்சிபுரம் அரசு தலைமை
மருத்துவமனை இணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.




0 comments:
Post a Comment