16 மில்லியன் கலர்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா!
2017ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனைக்கு வரும்

ஆரம்ப வகுப்புக்களில் நான்கு வர்ணங்களை ஒருங்கே கொண்ட பால்ட் பாயிண்ட் பேனாக்களை பயன்படுத்தியது எம் அனைவருக்கும் நினைவிருக்கும்.
அதன் பின்பு 10 வர்ணங்களைக் கொண்ட பேனாக்களும் அறிமுகமாகியிருந்தன.
ஆனால் தற்போது சுமார் 16 மில்லியன் வர்ணங்களில் எழுதக்கூடிய இலத்திரனியல் பேனா ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Cronzy பேனா 2 டொலர்கள் மட்டுமே பெறுமதி உடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பேனாவால் தொடர்ந்து 500 மீற்றர்கள் தூரம் வரை எழுதமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப் பேனா Li-Po மின்கலத்தினைக் கொண்டுள்ளதுடன், 95 கிராம் எடையையும், 6.7 அங்குல அளவு உயரம், 0.53 விட்டம் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிதி திரட்டும் நோக்கில் Indiegogo தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இப் பேனா 2017ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top