கோலாகலமாக இன்று தொடங்குகிறது, ஒலிம்பிக்
206
நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
உலகின்
மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு
ஒரு முறை
நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா
பிரேசில் நாட்டின்
ரியோ டி
ஜெனீரோ நகரில்
இன்று (வெள்ளிக்கிழமை)
தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள்
28 வகையான விளையாட்டில்
306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி
வருகிறார்கள்.
தொடக்க
விழா கால்பந்து
மைதானமான மரகானாவில்
அந்த நாட்டின்
நேரப்படி இரவு
8 மணிக்கு தொடங்குகிறது.
தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல்
ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு
உணர்வு பூர்வமான
கலை நிகழ்ச்சிகள்,
அதிரடி நடனங்கள்,
சாகசங்கள் மற்றும்
லேஷர் ஷோ,
வண்ணமயமான வாணவேடிக்கை
உள்ளிட்டவை இடம் பெறுகிறது.
நிகழ்ச்சியில்
பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம்
அணிகளின் அணிவகுப்பாகும்.
206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக
அணி வகுத்து
செல்வது கண்கொள்ளா
காட்சியாக இருக்கும்.
ஒலிம்பிக்
தாயகமான கிரீஸ்,
அணிவகுப்பில் முதல் நாடாக செல்லும். அதன்
பிறகு ஆங்கில
அகர வரிசைப்படி
ஒவ்வொரு அணியாக
வீறுநடை போடும்.
போட்டியை நடத்தும்
பிரேசில் அணிவகுப்பில்
கடைசி நாடாக
செல்லும். அதற்கு
முன்பாக அகதிகள்
செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
உலக
தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள்,
ரசிகர்கள் என்று
மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை
கண்டு களிக்க
இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று
மணி நேரத்திற்கு
மேலாக நீடிக்கும்
என்று தெரிகிறது.
பிரேசில்
நேரப்படி தொடக்க
விழா இரவு
8 மணிக்கு தொடங்கினாலும்,
நமக்கும் அவர்களுக்கும்
இடையே 81/2 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது.
அதாவது ஒலிம்பிக்
தொடக்க விழா
இலங்கை நேரப்படி
பார்த்தால் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு
தான் தொடங்கும்.
எதிர்வரும் 21-ந் திகதி வரை நடைபெறும் இந்த
ஒலிம்பிக் கொண்டாட்டத்தில்
பதக்கப் பட்டியலில்
முதலிடத்தை பிடிப்பதில் வழக்கம் போல் அமெரிக்கா,
சீனா இடையே
கடும் போட்டி
இருக்கும். அமெரிக்கா 292 பெண்கள் உட்பட 554 பேருடனும், சீனா
413 பேருடனும் ரியோவுக்கு படையெடுத்துள்ளது.
போட்டியை நடத்தும்
பிரேசில் அணி
465 பேரை களம்
இறக்குகிறது.
ஒலிம்பிக்
போட்டியையட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் துணை
இராணுவ
படையினர் பாதுகாப்பு
பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது
தவிர ஒலிம்பிக்
போட்டி தொடர்பான
பணிகளில் அரசு
அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம்
தன்னார்வ தொண்டர்கள்
என்று மொத்தம்
90 ஆயிரம் பேர்
ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
0 comments:
Post a Comment